16 மாவட்டங்களில் இன்று பலத்த காற்றுடன் கனமழைக்கு வாய்ப்பு! கிளாம்பாக்கத்திலிருந்து இன்று மாலை முதல் கூடுதல் மாநகரப் பேருந்துகள்!செய்யறிவே எதிர்காலம்; வளர்ச்சியை மட்டுப்படுத்த முடியாது! டிரம்ப் திட்டவட்டம்!மக்கள் ஒப்புதல் இல்லாமல் பட்டினம்பாக்கத்தில் தலைமைச் செயலகம் கட்ட முடியாது! திருமாவளவன்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 360 குறைந்தது!சிதம்பரத்தில் அம்பேத்கர் சிலை சேதம்: போலீசார் குவிப்பு

பாயும் ஒளி நீ எனக்கு: டிரைலர், இசை வெளியீட்டுத் தேதி அறிவிப்பு! 

நடிகர் விக்ரம் பிரபு,  நடிகை வாணி போஜன் உடன் இணைந்து நடித்துள்ள பாயும் ஒளி நீ எனக்கு படத்தின் இசை, டிரைலர் வெளியீட்டுத் தேதி குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.  

Published On :

டாணாக்காரன், பொன்னியின் செல்வன் படங்களின் வெற்றிகளுக்குப் பிறகு விக்ரம் பிரபு , நடிகை வாணி போஜன் உடன் நடித்துள்ள படம் ‘பாயும் ஒளி நீ எனக்கு’. இந்தப் படத்தினை இயக்குகிறார் கார்திக் அத்வைத். இப்படத்தினை எழுதி இயக்குவது மட்டுமல்லாமல் தயாரிப்பாளராகவும் களமிறங்கியுள்ளார் கார்த்திக் அத்வைத். 

Story image

இந்தப் படத்தில் விவேக் பிரசன்னா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இப்படம் ஆக்‌ஷன் திரில்லராக இருக்கும் என டீசரிலிருந்து தெரியவருகிறது. இந்தப்படத்திற்கு இசை- சாகர், பாடலாசிரியர்- கார்த்திக் நேத்தா, ஸ்டன்ட் மாஸ்டர்- தினேஷ் காசி. 

இந்தப் படத்திற்கு சமீபத்தில் தணிக்கைச் சான்றிதழ் யு/ஏ கிடைத்தது. இந்தப் படம் ஜூன் 23ஆம் தேதி திரையரங்குகளில் உலகமெங்கும் வெளியாகுமென படக்குழு ஏற்கனவே தெரிவித்துள்ளது. 

Story image

இந்நிலையில் படத்தின் டிரைலர் மற்றும் இசை ஜூன் 16ஆம் தேதி வெளியாகுமென படக்குழு தெரிவித்துள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.