
இயக்குநர் மடோன் அஸ்வின் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகிவரும் திரைப்படம் மாவீரன். இப்படத்தின் நாயகியாக அதிதி ஷங்கர் நடிக்கிறார். முக்கிய கதாபாத்திரங்களில் மிஷ்கின், சரிதா, யோகிபாபு போன்றோர் நடிக்கிறார்கள். இப்படத்திற்கு பரத் சங்கர் இசையமைக்கிறார்.
மடோன் அஸ்வின் இயக்கிய மண்டேலா படத்தில் யோகிபாபு கதாநாயகனாக நடித்தார். இந்தப் படம் தேசிய விருது வாங்கியது. விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பினை பெற்றது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிக்க: தெலுங்கு நடிகை ஸ்ரீ லீலா பிறந்தநாளில் வெளியான 2 பட அப்டேட்டுகள்!
மாவீரன் திரைப்படம், ஜூலை 14 ஆம் தேதி வெளியாகவுள்ள நிலையில், இதன் தமிழ்நாடு திரையரங்க வெளியீட்டு உரிமையை ரெட் ஜெயண்ட் நிறுவனம் கைப்பற்றியுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.
இதையும் படிக்க: தீபிகா படுகோன் மாதிரி இருக்கிறீர்கள்: மாளவிகாவின் புகைப்படத்திற்கு ரசிகர் கமெண்ட் !
ப்ரின்ஸ் படம் சரியாக போகாததால் மாவீரன் படப்பிடிப்பில் இயகுநருடன் மோதல் என முன்பு செய்திகள் வெளியான நிலையில் நேர்காணல் ஒன்றில் அதையெல்லாம் இயக்குநர் மறுத்துள்ளார். இயக்குநர் மடோன் அஸ்வின் கூறியதாவது:
சிவகார்த்திகேயன் இந்தப் படத்தில் நான் எழுதிய கதாபாத்திரத்தில் பொருந்திப்போனார். அவருக்காக எந்த காட்சிகளும் மாற்றவில்லை. அவரும் இதை மாற்ற வேண்டுமென கூறவில்லை. படத்தில்கூட நகைச்சுவை அவர் பண்ணவில்லை. அவரை சுற்றியுள்ளவர்கள் மட்டுமே காமெடி பண்ணுவார்கள். ஆனால் சின்ன சின்ன ஆலோசனைகளை கொடுத்தார். அது படத்திற்கு மிகவும் உதவியாக இருந்தது. ஸ்கிரிப்ட் பற்றி அறிவுள்ள ஆளாகத்தான் சிவகார்த்திகேயன் உள்ளார்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...