12 மசோதாக்களுக்கு ஆளுநர் ஆர்லேகர் ஒப்புதல்!காய்ச்சல் பாதிப்புக்கு கூடுதல் கட்டணம் வசூல்: தனியாா் மருத்துவமனைகளுக்கு எச்சரிக்கைநீட்-சிறப்பு மருத்துவ இடங்களுக்கான தகுதி மதிப்பெண்ணை 30%-ஆக குறைக்கத் தயாா்: மத்திய அரசு6-ஆம் வகுப்பில் மும்மொழிக் கொள்கை: அமல்படுத்த உச்சநீதிமன்றம் அறிவுறுத்தல்பயங்கரவாத அமைப்புகளுக்கு பாகிஸ்தான் தொடா் ஆதரவு: ஐ.நா.வில் இந்தியா குற்றச்சாட்டு

முன்னாள் மனைவியின் இழப்பீட்டு தொகையை தொண்டு நிறுவனங்களுக்கு வழங்கும் ஜானி டெப்

பிரபல அமெரிக்க நடிகர் ஜானி டெப் தன் முன்னாள் மனைவியிடமிருந்த பெற உள்ள 1 மில்லியன் டாலர் இழப்பீட்டு தொகையை தொண்டு நிறுவனங்களுக்கு வழங்க முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Published On :

பிரபல அமெரிக்க நடிகர் ஜானி டெப் தன் முன்னாள் மனைவியிடமிருந்த பெற உள்ள 1 மில்லியன் டாலர் இழப்பீட்டு தொகையை தொண்டு நிறுவனங்களுக்கு வழங்க முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

'பைரேட்ஸ் ஆஃப் தி கரிபியன்' படங்களில் 'ஜேக் ஸ்பாரோ' கதாபாத்திரத்தில்  நடித்து உலகம் முழுவதும் புகழ்பெற்றவர் ஜானி டெப். அவர் நடிகை ஆம்பர் ஹெர்டை 2015இல் திருமணம் செய்து கொண்டார். பிறகு 2 ஆண்டுகள் கழித்து கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் விவாகரத்துப் பெற்றனர்.

பின்னர் 2018-ல் ஆம்பர் ஹெர்ட் பிரபல பத்திரிக்கை ஒன்றில் பெண்கள் எவ்வாறு பாலியல் ரீதியாக கொடுமைப்படுத்தப்படுகிறார்கள் என்கிற கட்டுரையில் தனது முன்னாள் கணவரான ஜானி டெப் மீது அவதூறுகளை எழுதினார். இதனால் ஜானி டெப்க்கு ஏராளமான அவமதிப்புகள் நடந்தது. அவருக்கு வரவேண்டிய படங்கள் தட்டிக்கழிக்கப்பட்டன. எனவே, அவர் நஷ்டஈடு கேட்டு ஆம்பர் ஹெர்ட் மீது நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். 

இதையும் படிக்க: கைதி - 2 படத்தில் சூர்யா?

3 ஆண்டுகளாக நடைப்பெற்று வந்த வழக்கில் கடந்த ஜூன் மாதம் ஜானி டெப்புக்கு ஆதரவாக தீர்ப்பு வெளியானதுடன்  ஆம்பர் ஹெர்ட் 10 மில்லியன் டாலரை இழப்பீட்டு தொகையாகவும் , 5 மில்லியன் டாலரை தண்டனைக்குரிய இழப்பீட்டு தொகையாகவும் மொத்தம் 15 மில்லியன் டாலரை ஜானிடெப்புக்கு வழங்க வேண்டும் என நீதிபதிகள் உத்தரவு பிறப்பித்தனர். 

Story image

அதில் ஒரு பகுதியாக 1 மில்லியன் டாலரை வழங்க ஆம்பர் ஹெர்ட் முன்வந்துள்ளார். இத்தொகையை ஜானி டெப், 'மேக் ஏ பிலிம் பவுண்டேஷன்', 'தி பெயின்டட் டர்ட்டில்', 'ரெட் பெதர்', 'டெடியரோ சோசைட்டி' மற்றும் 'அமசோனியா பண்ட் அலயன்ஸ்' ஆகிய ஐந்து தொண்டு நிறுவனங்களுக்கு வழங்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.