
அர்ஜுன் ரெட்டி படத்தினை இயக்கியவர் சந்தீப் ரெட்டி வங்கா. விமர்சன ரீதியாக மட்டுமல்லாமல் நல்ல வசூலையும் பெற்றது. அடுத்து பிரபல ஹிந்தி நடிகர் ரன்பீர் கபூர் நடித்துள்ளார். படத்தின் பெயர் ‘அனிமல்’ என பெயரிடப்பட்டுள்ளது. கொடூரமான விலங்கு போல ரன்பீர் ரத்தம் வடிய கையில் சுத்தியலுடன் சிகரெட் பிடிக்கும் முதல் பார்வை போஸ்டர் ஜனவரியில் வெளியாகியது.
இதையும் படிக்க: தன்னைத் தானே ஓவியம் எனப் புகழும் நடிகை தமன்னா!
இந்தப் படத்தில் ராஷ்மிகா கதாநாயகியாக நடித்துள்ளார். இயக்குநரின் சொந்த தயாரிப்பான பத்ரகாளி பிக்சர்ஸ் தயாரிக்கிறது. ஒளிப்பதிவு - அமித் ராய். சுப்ரீம் சுந்தர் சண்டைப் பயிற்சியளிக்கிறார்.
இதையும் படிக்க: மிகக் கொடூரமான மனிதன்: சலார் திரைப்படம் பற்றி நடிகர் பிரபாஸ் பிரமிப்பு!
தெலுங்கு, தமிழ், ஹிந்தி, மலையாளம், கன்னடம் என 5 மொழிகளிலும் பான் இந்தியப் படமாக உலகம் முழுவதும் ஆகஸ்ட் மாதம் 11ஆம் நாள் திரையிக்கு வர உள்ளது.
நடிகை ராஷ்மிகா இந்தப் படத்தின் படப்பிடிப்பினை முடித்து நீண்ட பதிவு எழுதியுள்ளார். அதில் அவர் கூறியதாவது:
நேற்றைய இரவு எனது காட்சிகளை நடித்து முடித்தேன். இதுதான் அனிமல் படத்தின் கடைசிநாள் படப்பிடிப்பு எனக்கு. தற்போது புஷ்பா 2படத்தில் நடிக்கிறேன். இந்தப் படத்தில் நடித்தது மிக்க மகிழ்ச்சியாக உள்ளது. சாதரண ஒருநாளில் இந்தப் படம் எனக்கு ஆச்சரியமாக வந்தது. இந்த படக்குழுவுடன் நடித்தது மிக்க மகிழ்ச்சி. 50 நாள்கள் நடித்தேன்; தற்போது வெறுமையாக உள்ளது. இந்த படக்குழுவிற்கு எப்போதும் என் மனதில் தனித்த இடமிருக்கும். ரன்பீர் நல்ல நடிகர். மிக நல்ல மனிதர். அவருக்கு எல்லாமே நன்றாகவே நடக்க வேண்டும். நான் நன்றாக நடித்திருந்தால் அந்தப் புகழ் இயக்குநரையே சேரும்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...