
நடிகர் தனுஷ் அருண் மாதேஸ்வரன் இயக்கும் கேப்டன் மில்லர் படத்தில் நடித்து வருகிறார். சத்ய ஜோதி ஃபிலிம்ஸ் தயாரிக்கும் இந்தப் படத்துக்கு ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைக்கிறார்.
கதாநாயகியாக பிரியங்கா மோகன் நடிக்க, முக்கிய வேடத்தில் சந்தீப் கிஷன் மற்றும் கன்னட சூப்பர் ஸ்டார் சிவராஜ் குமார் ஆகியோர் நடிக்கின்றனர். இப்படத்தின் டீசர் அடுத்த மாதம் வெளியாக உள்ளது.
இதையும் படிக்க: பிரபாஸ் படத்தில் இணைந்த கமல்ஹாசன்: படக்குழு அதிகாரபூர்வ அறிவிப்பு!
கேப்டன் மில்லர் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ள நிலையில் தற்போது நடிகர் தனுஷ் ட்விட் செய்துள்ளார்.
விரைவில் படத்தின் முதல் தோற்றப் பார்வை வெளியாகுமென தேதி குறிப்பிடாமல் அறிவித்துள்ளார்.
Captain Miller first look
— Dhanush (@dhanushkraja) June 25, 2023
இதனால் ரசிகர்கள் ஆர்வத்தில் உள்ளனர்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...