புதிய சீரியல்கள் 'எதிர்நீச்சல்' போல இருக்க வேண்டும்! பெருகும் ஆதரவு!!

கோலங்கள் தொடரை இயக்கிய திருச்செல்வம், திரைக்கதை எழுதி இந்தத் தொடரை இயக்கி வருகிறார். கோலங்கள் தொடரில் நடித்த ஸ்ரீவித்யா வசனம் எழுதுகிறார். 
புதிய சீரியல்கள் 'எதிர்நீச்சல்' போல இருக்க வேண்டும்! பெருகும் ஆதரவு!!

சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிவரும் எதிர்நீச்சல் தொடரைப் போன்று புதிதாக ஒளிபரப்பாகவுள்ள தொடர்கள் இருந்தால் நன்றாக இருக்கும் என ரசிகர்கள் பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர். 

சன் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனிக்கிழமைவரை இரவு 9.30 மணிக்கு ஒளிபரப்பாகிவரும் தொடர் எதிர்நீச்சல். சன் என்டர்டெயின்மெண்ட் மற்றும் திருசெல்வம் தியேட்டர்ஸ் இணைந்து இந்தத் தொடரைத் தயாரிக்கின்றனர். 

கோலங்கள் தொடரை இயக்கிய திருச்செல்வம், திரைக்கதை எழுதி இந்தத் தொடரை இயக்கி வருகிறார். கோலங்கள் தொடரில் நடித்த ஸ்ரீவித்யா வசனம் எழுதுகிறார். 

பழமைவாதம் நிறைந்த புகுந்த வீட்டிற்குச் செல்லும் மருமகள்கள் சந்திக்கும் இன்னல்களை இந்தத் தொடர் கருவாகக் கொண்டுள்ளது. மருமகள்கள் மூலம் கால மாற்றத்துக்கு பிற்போக்குத் தனங்களை தட்டிக்கேட்கும் வகையில் எதார்த்தமாக திரைக்கதை அமைக்கப்பட்டு வருகிறது. 

இதனால், குடும்பத் தலைவிகளை மட்டுமல்லாமல், இளைஞர்களையும் இந்தத் தொடர் கவர்ந்துள்ளது. இந்தத் தொடரில் வரும் ஒவ்வொரு கதாபாத்திரங்களையும் தனித்தனியாக எடுத்து பேசும் அளவுக்கு ஆழமாகவும் அதே வேளையில் எதார்த்தமாகவும் அமைக்கப்பட்டுள்ளன. 

மதுமிதா, சபரி பிரசாந்த், கனிகா, பிரியதர்ஷினி, ஹரிப்ரியா இசை, ஜி. மாரிமுத்து, சத்தியப்பிரியா உள்ளிட்ட பலர் இந்தத் தொடரில் நடித்து வருகின்றனர். 

தற்போது சன் தொலைக்காட்சியில் புதிய தொடர்கள் அறிமுகமாகவுள்ளன. 'புதுவசந்தம்' தொடர் ஜூன் 26ஆம் தேதி முதல் ஒளிபரப்பாகவுள்ளது. 'அனாமிகா' தொடர் ஒளிபரப்பு நேரம் விரைவில் அறிவிக்கப்படவுள்ளது. இந்த இரு தொடர்களின் முன்னோட்ட விடியோக்களும் மக்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளன.

எனினும் புதிதாக வரும் தொடர்கள் எதிர்நீச்சல் தொடரைப் போல இருந்தால் நன்றாக இருக்கும் என இளைஞர்கள் பலர் முன்னோட்ட விடியோக்களில் கருத்துத் தெரிவித்து வருகின்றனர். 

மேலும், சன் தொலைக்காட்சியில் எத்தனைத் தொடர்கள் வந்தாலும், அவை எதிர்நீச்சல் தொடருக்கு ஈடாக இருக்காது என்பது போன்ற கருத்துகளைப் பதிவிட்டு வருகின்றன.

மக்கள் மனங்களை மட்டுமல்லாமல், சமீபத்தில் நடைபெற்ற சன் குடும்ப விருதுகள் நிகழ்ச்சியில் எதிர்நீச்சல் தொடர் அதிக விருதுகளை வென்றது குறிப்பிடத்தக்கது. 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com