
நல்ல நண்பர்களை இழந்துவிடக்கூடாது என இயக்குநர் செல்வராகவன் தன் டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
துள்ளுவதோ இளமை படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார் செல்வராகவன். பின்னர் அவரது படங்களுக்கு தனி ரசிகர் பட்டாளமே உருவானது. தற்போது நடிகராகவும் பல படங்களில் நடித்து வருகிறார். இறுதியாக மோகன் ஜி. இயக்கத்தில் பகாசூரன் படத்தில் நடித்திருந்தார்.
செல்வராகவன் ட்விட்டரில் அடிக்கடி பதிவிட்டு வருவார். சமீபத்தில், “தனியாகத்தான் வந்தோம். தனியாகத்தான் போவோம். நடுவில் என்ன துணை வேண்டி கிடக்கிறது? துணை என்பது கானல் நீர். நெருங்க நெருங்க தூரம் ஓடும்” எனப் பதிவிட்டது சர்ச்சையானது. இந்தப் பதிவுக்கு சிலர் ‘உண்மைதான்’ எனவும், சிலர் ‘என்னாச்சி சார், நீங்களும் விவாகரத்து செய்யப்போறீங்களா?” என கேள்வி எழுப்பினர்.
இதையும் படிக்க: விஷால் படப்பிடிப்பில் மீண்டும் விபத்து
இந்நிலையில், தற்போது தன் டிவிட்டர் பக்கத்தில், “அனுபவத்தில் சொல்கிறேன். நல்ல நண்பர்களை மட்டும் இழந்து விடாதீர்கள். எனக்கு நண்பர்களே கிடையாது. 23 வருடங்களாய் வேலையை தவிர எதையும் யோசித்ததில்லை. இன்று நண்பர்களுடன் ஆனந்தமாய் இருப்பவர்களை பார்த்தால் பொறாமையாய் உள்ளது.. எங்கு போய் நட்பை தேடுவேன்” என உருக்கமாக பதிவிட்டுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.