
மார்ச் மாதத்தின் தொடக்கமான இந்த வாரத்தில் 6 தமிழ்த் திரைப்படங்கள் திரைக்கு வரவிருக்கின்றன.
அகிலன்
பூலோகம் படத்துக்கு பிறகு இயக்குநர் கல்யாண கிருஷ்ணனுடன் ஜெயம் ரவி இணைந்திருக்கும் படம் அகிலன். இந்தப் படத்தை ஸ்கிரீன் சீன் மீடியா எண்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரித்துள்ளது.
இந்தப் படத்தில் தான்யா, பிரியா பவானி ஷங்கர் உள்ளிட்டோர் நாயகிகளாக நடித்துள்ளனர். சாம் சிஎஸ் இசையமைத்துள்ள இந்தப் படத்துக்கு விவேக் ஆனந்த் ஒளிப்பதிவு செய்துள்ளார்.
கொன்றால் பாவம்
இயக்குநர் தயாள் பத்மநாபன் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்தப் படத்தில் நடிகர்கள் வரலஷ்மி சரத்குமார், சந்தோஷ் பிரதாப் இருவரும் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இவர்களுடன் ஈஸ்வரி ராவ், சார்லி, மனோபாலா, ஜெயகுமார், மீசை ராஜேந்திரன், சுப்ரமணியம் சிவா, இம்ரான், சென்றாயன், TSR ஸ்ரீனிவாசன், யாசர், கவிதா பாரதி, தங்கதுரை, கல்யாணி மஹாதவி மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். சாம் சி எஸ் இந்தப் படத்திற்கு இசையமைத்துள்ளார்.
ஸ்ரீ மோகன் பாபுவின் கன்னட நாடக கதையைத் தழுவி இந்தப் படம் எடுக்கப்பட்டுள்ளது. கன்னடம் மற்றும் இதன் தெலுங்கு ரீமேக்கினை எழுதி தயாள் பத்மநாபன் இயக்கி உள்ளார்.
இரும்பன்
நடிகர்கள் யோகிபாபு, பிக்பாஸ் ஐஸ்வர்யா மற்றும் ஜூனியர் எம்ஜிஆர் நடித்துள்ள இந்தப் படத்தை லெமூரியா மூவிஸ் தயாரித்துள்ளது. இந்தப் படத்தின் போஸ்டர்களில் இயக்குநர் கி.ரா-வின் பெயர் இடம்பெறாமல் வெளியானது சர்ச்சையானது.
மெமரீஸ்
ஜிவி, 8 தோட்டாக்கள், வனம் உள்ளிட்ட படங்களின் மூலம் கவனம் ஈர்த்த நடிகர் வெற்றி நடிப்பில் உருவாகியுள்ள இந்தப் படத்தை இயக்குநர்கள் ஷியாம், ப்ரவீன் ஆகியோர் இயக்கியுள்ளனர். சைக்கோ திரில்லராக உருவாகியுள்ள இந்தப் படத்தில் நடிகர் வெற்றி 4 தோற்றங்களில் நடித்துள்ளார்.
இவற்றுடன் பியூட்டி, மான்வேட்டை உள்ளிட்ட படங்களும் வெளியாகின்றன.
அதேபோல் ஏற்கெனவே திரையில் வெளியான நடிகர் கவினின் டாடா திரைப்படம் அமேசான் ப்ரைம் தளத்திலும், நடிகர் யோகிபாபுவின் பொம்மை நாயகி திரைப்படம் ஜீ5 தளத்திலும், நடிகர் ஆர்ஜே பாலாஜியின் ரன் பேபி ரன் டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டார் தளத்திலும் வெளியாகின்றன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.