டி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!மாநிலங்களவை அதிமுக வேட்பாளராக தம்பிதுரை அறிவிப்பு - பாமகவுக்கு ஒரு இடம்!முஸ்லிம்கள் கொல்லப்படுவதில் மேற்கு வங்கம் முதலிடம் - பாஜக குற்றச்சாட்டு! திருச்சி சிவா, பேராசிரியர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் - மாநிலங்களவை திமுக வேட்பாளர்களாக போட்டியிடுகின்றனர்மாநிலங்களவை உறுப்பினர் ஆகிறார் பிகார் முதல்வர் நிதீஷ் குமார்?28 பேரவை, 1 மாநிலங்களவை : கூட்டணி பங்கீட்டில் மனநிறைவு - செல்வப்பெருந்தகை
/

இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜின் ட்விட்டர் பக்கம் முடக்கம்

கடந்த இரண்டு நாட்களாக தனது ட்விட்டர் பக்கம் ஹேக் செய்யப்பட்டுள்ளதாக இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ் தெரிவித்துள்ளார். 

News image
Updated On :12 மார்ச் 2023, 1:35 pm

DIN

கடந்த இரண்டு நாட்களாக தனது ட்விட்டர் பக்கம் ஹேக் செய்யப்பட்டுள்ளதாக இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ் தெரிவித்துள்ளார். 

தமிழ் சினிமாவின் பிரபல இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ். 2001ஆம் ஆண்டு வெளியான மின்னலே படத்தின் மூலம் அறிமுகமான இவர் பல வெற்றிப் படங்களுக்கு இசையமைத்துள்ளார். கௌதம் மேனன் இயக்கத்தில் உருவாகிக்கொண்டிருக்கும் ‘துருவ நட்சத்திரம்’ படத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜ்தான் இசை. 

இந்த நிலையில் கடந்த இரண்டு நாட்களாக தனது ட்விட்டர் பக்கம் ஹேக் செய்யப்பட்டுள்ளதாக இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது முகநூலில், வணக்கம் நண்பர்களே, கடந்த இரண்டு நாட்களாக எனது ட்விட்டர் கணக்கு ஹேக் செய்யப்பட்டுள்ளது. 

சரி செய்தவுடன் திரும்ப வருவேன். இந்த நாள் இனிய நாளாகட்டும். இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார். இது அவரது ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.