தொலைக்காட்சித் தொடர்களில் இருந்து நடிகையாக பிரியா பவானி ஷங்கர் மேயாத மான் படத்தில் அறிமுகமானார். பின்னர் முக்கியமான நடிகையாக உருமாறியுள்ளார்.
தற்போது அவரிடம் கிட்டதட்ட 10 படங்கள் கைவசம் இருப்பது குறிப்பிடத்தக்கது. அகிலன், பத்து தல, ருத்ரன், டீமாண்டி காலணி 2, கல்யாணும் காமினியும், பொம்மை, இந்தியன் 2, பெயரிடப்படாத தெலுங்கு படமொன்றும் இதில் அடங்கும். இதில் பல படங்கள் ரிலீஸுக்கு காத்திருக்கின்றன. சமீபத்தில் தெலுங்கில் கல்யாணும் காமினியும் படம் விஜய்யின் வாரசுடு படத்தோடு மோதியது குறிப்பிடத்தக்கது. இதில் பிரியாவின் நடிப்பு விமர்சகர்களால் பாராட்டப்பட்டது.
லியோ படம் காஷ்மீரில் விருவிருப்பாக படப்பிடிப்பு நடந்துவருகிறது. இந்நிலையில் நடிகை பிரியா பவானி ஷங்கர் பகிர்ந்த புகைப்படத்தில் பின்புறம் மலைகள் இருப்பதால் ரசிகர்கள் கமெண்டில் கேள்வி கேட்டு வருகின்றனர். ஆனால் அவர் சென்றிருப்பது காஷ்மீர் அல்ல ஹிமாசல்.
மலைப்பிரேதசங்களுக்கு யார் சுற்றுலா சென்றாலும் ரசிகர்களுக்கு லியோ படத்தில் நடிப்பார்களோ என்ற அளவுக்கு குழப்பம் ஏற்படுகிறது.
அந்தளவுக்கு படம் மக்கள் மத்தியில் எதிர்பார்பை கிளப்பியுள்ளது.