சமந்தா பதிவிற்கு கமெண்ட் செய்த அனுஷ்கா சர்மா! 

சமந்தா பதிவிற்கு கமெண்ட் செய்த அனுஷ்கா சர்மா! 

நடிகை சமந்தா பகிர்ந்த இன்ஸ்டாகிராம் பதிவிற்கு நடிகை அனுஷ்கா சர்மா செய்த கமெண்ட்டிற்கு ரசிகர்கள் ஆதரவு தெரிவித்து வருகின்றனர். 
Published on

தமிழ், தெலுங்கு என திரைப்பட உலகில் முன்னணி நாயகியாக இருக்கும் நடிகை சமந்தா பல படங்களில் ஒப்பந்தமாகி பிசியாக நடித்து வந்த நடிகை. திடீரென மயோசிடிஸ் எனப்படும் தசை அழற்சி நோயால் பாதிக்கப்பட்டு, தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்தார். இந்த தகவல் திரையுலகினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியது.

யசோதா திரைப்படம் சமந்தாவிற்கு நல்ல வரவேற்பினை கொடுத்தது. சாகுந்தலம் ஏப்.14ஆம் தேதி வெளியாக உள்ளது. விஜய் தேவரகொண்டாவுடன் குஷி படத்திலும் ரூஸோ சகோதரர்கள் இயக்கும் எபிசோடில் சமந்தா, வருண் தவானுடன் ‘சிட்டாடல்’ தொடரிலும் நடித்து வருகின்றனர். 

சமீபத்தில் சம்ந்தா பகிர்ந்த புகைப்படத்தில் அவரது கைகளில் ரத்த காயங்கள் உள்ளது. அந்தப் புகைப்படத்திற்கு ‘சண்டைக்காட்சிகளின்போது கிடைத்த வெகுமதி’ என தலைப்பிட்டுள்ளார். இந்த காயம் வருண்தவானுடன் நடிக்கும் ‘சிட்டாடல்’ எனும் படத்தின் படப்பிடிப்பில் ஏற்பட்டதாக தகவல் வெளியாகியது. 

நடிகை அனுஷ்கா சர்மா குழந்தைப் பேற்றுக்குப் பிறகு சக்தா எக்ஸ்பிரஷ் படத்தில் நடித்துள்ளார். விளையாட்டு வீராங்கனை ஜூலன் கோஸ்வாமி பயோபிக் படமாக உருவாகி வந்துள்ளது. 

இந்நிலையில், கடவுளை கும்பிடுவது போல புகைப்படத்தினை பகிர்ந்த சமந்தா, “சில நேரங்களில் அமானுஷ்ய சக்தி தேவைப்படுவதில்லை. நம்பிக்கை மட்டுமே அதை கொண்டுவரும். நம்பிக்கை நம்மை அமைதியாக்கும். நம்பிக்கை நண்பராகவும் ஆசானாகவும் மாறும். நம்பிக்கை உங்களை அசாதரண மனிதாக்கும்” எனப் பதிவிட்டுருந்தார்.

இந்தப் பதிவிற்கு நடிகையும் விராட் கோலியின் மனைவியுமான அனுஷ்கா சர்மா, “ஆமாம்” என கமெண்ட் செய்திருந்தார். இந்த கமெண்டிற்கு 4 ஆயிரம் லைக் கிடைத்துள்ளது. 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

X
Dinamani
www.dinamani.com