
பரியேறும் பெருமாள், கர்ணன் ஆகிய படங்களுக்குப் பின் உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் மாமன்னன் என்கிற படத்தை மாரி செல்வராஜ் இயக்கியுள்ளார். நீண்ட நாள்களாக தயாரிப்பிலிருக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் நிறைவு பெற்றது.
இதையும் படிக்க: ஹாட்டாக இருக்கிறீர்கள்: கீர்த்தி சுரேஷை பாராட்டிய ஸ்ரேயா!
மேலும், இந்த படத்தில் கீர்த்தி சுரேஷ், வடிவேலு, ஃபஹத் பாசில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார். ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் மாமன்னன் திரைப்படத்தை தயாரித்துள்ளது. தற்போது போஸ்ட் புரடக்ஷன் பணிகள் நடைபெற்று வருகிறது.
இதையும் படிக்க: 700 கோடி மக்களில் நீங்கள்தான் அழகு: த்ரிஷாவை பாராட்டும் ரசிகர்கள்
மாமன்னன் திரைப்படத்தின் முதல் பார்வை மே 1 நள்ளிரவு வெளியானது. தற்போது காலையில் புதிய போஸ்டர் இன்றும் வெளியாகியுள்ளது. இதில் ஜூன் மாதம் வெளியீடு என அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. ஆனால் ரிலீஸ் தேதி பற்றி எதும் தகவல் தெரிவிக்கவில்லை.
இதையும் படிக்க: அனைவரும் கற்றுக்கொள்ள வேண்டிய பாடம்: பீட்டர் பால் மறைவிற்கு வனிதா உருக்கம்
#பிறப்பொக்கும்_எல்லா_உயிர்க்கும்#MAAMANNAN@mari_selvaraj @arrahman #Vadivelu @KeerthyOfficial #FahadhFaasil @thenieswar@editorselva @dhilipaction @kabilanchelliah@kalaignartv_off @MShenbagamoort3 @teamaimpr pic.twitter.com/6tcoXphnns
— Udhay (@Udhaystalin) May 1, 2023
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...