தி கேரளா ஸ்டோரி: அதிகரிக்கும் சர்ச்சை

பான் இந்தியா திரைப்படமாக வெளியாக உள்ள ‘தி கேரளா ஸ்டோரி’ படத்தின் டிரைலர் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. 
தி கேரளா ஸ்டோரி: அதிகரிக்கும் சர்ச்சை

பான் இந்தியா திரைப்படமாக வெளியாக உள்ள ‘தி கேரளா ஸ்டோரி’ படத்தின் டிரைலர் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. 

கேரளத்தைச் சேர்ந்த அப்பாவி இந்துப் பெண்களை மூளைச்சலவை செய்து இஸ்லாமுக்கு மதமாற்றி பின் அவர்களை  ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாத அமைப்புக்கு பாலியல் அடிமைகளாக  அனுப்பும் ஒரு குழுவை மையமாகக் கொண்டு உருவாகியிருக்கிறது ‘தி கேரளா ஸ்டோரி’. இப்படத்தை சுதிப்தோ சென் இயக்கியுள்ளார்.

படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியாகி இதுவரை 2 கோடி பார்வைகளைக் கடந்துள்ளது. குறிப்பாக, ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் டிரைலர் குறித்து தங்கள் கருத்துக்களையும் பின்னூட்டமிட்டுள்ளனர். 

டிரைலரில் இப்படம் பல உண்மைச் சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டதாகவும் கேரளத்தைச் சேர்ந்த 32,000 பெண்கள் இந்த வலையில் சிக்கியுள்ளதாகவும் அதிர்ச்சியான தகவல்களைப் படக்குழு தெரிவித்துள்ளது. 

இந்நிலையில், கேரள இளைஞர் இஸ்லாமிய அமைப்பு ஒன்று ஐஎஸ்ஐஎஸ் அமைப்பிற்கு கேரளத்திலிருந்து பெண்கள் கடத்தப்படுகிறார்கள் என ஆதாரத்துடன் நிரூபித்தால் படத்தின் இயக்குநருக்கு ரூ.1 கோடி தருகிறோம் எனத் தெரிவித்துள்ளது. 

மேலும், டிரைலரில் இஸ்லாம் மதத்தை விமர்சிக்கும் வசனங்களும் இடம்பெற்றுள்ளதால் இப்படம் கடுமையான சர்ச்சையை சந்தித்துள்ளது. முக்கியமாக, படத்தை தடை செய்ய இஸ்லாமிய அமைப்புகள் கோரிக்கை வைத்து வருகின்றன.

தமிழ், மலையாளம், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழிகளில் உருவான இப்படம் வருகிற மே 5 ஆம் தேதி திரைக்கு வருகிறது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com