இந்தியாவின் முதல் திரைப்படம் வெளியாகி 110 ஆண்டுகள் நிறைவு!

இந்தியாவின் முதல் திரைப்படம் வெளியாகி இன்றுடன் 110 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளது. 
இந்தியாவின் முதல் திரைப்படம் வெளியாகி 110 ஆண்டுகள் நிறைவு!

இந்தியாவின் முதல் திரைப்படம் வெளியாகி இன்றுடன் 110 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளது. 

உலகம் முழுவதும் இன்று இந்திய சினிமாவுக்கென தனி அடையாளமும் இடமும் உண்டு. நாட்டில் 8,000-க்கும்  அதிகமான திரைகளில் திரைப்படங்கள் வெளியாகி வருகின்றன. இந்தியப் படங்கள் உலகளவில் ஆண்டுக்கு சுமார் ரூ.20,000 கோடியளவில் வியாபாரமும் செய்கின்றன.

இந்நிலையில், இந்தியாவின் முதல் மௌன திரைப்படமான ராஜா ஹரிச்சந்திரா கடந்த 1913 ஆம் ஆண்டு மே 3 ஆம் தேதி மும்பையில் திரைக்கு வந்தது. இந்திய சினிமா முன்னோடியான தாதா சாஹேப் பால்கே தயாரிப்பு - இயக்கத்தில் 40 நிமிட படமாக வெளியான இப்படம் இன்றுடன் தன் 110 ஆண்டுகளை நிறைவு செய்கிறது!

இதுதான் இந்திய சினிமாவின் வயதாகவும் கருதப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com