
நடிகர் கவினுக்கு ஜோடியாக அயோத்தி படத்தில் நாயகியாக நடித்த ப்ரீத்தி அஸ்ராணி ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
நடிகர் கவின் நடிப்பில் வெளியான ‘டாடா’ திரைப்படம் நல்ல வரவேற்பைப் பெற்றதுடன் வசூல் ரீதியாகவும் வெற்றிப் படமாக அமைந்தது.
கவின் அடுத்ததாக நடன இயக்குநர் சதீஷ் இயக்கத்தில் நடிக்க உள்ளார். இந்நிலையில், இப்படத்திற்கு நாயகியாக சசிகுமார் நடிப்பில் வெளியான அயோத்தி படத்தில் நாயகியாக நடித்திருந்த ப்ரீத்தி அஸ்ராணி ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அயோத்தி படத்தில் ப்ரீத்தியின் நடிப்பு ரசிகர்களைக் கவர்ந்திருந்தது குறிப்பிடத்தக்கது.