தி கேரளா ஸ்டோரியைத் தொடர்ந்து சர்ச்சையைக் கிளப்பும் திப்பு சுல்தான் டீசர்!

தி கேரளா ஸ்டோரி திரைப்படம் கிளப்பிய பரபரப்பு முடிவதற்குள் திப்பு சுல்தான் குறித்த புதிய படத்தின் டீசர்  சர்ச்சையைக் கிளப்பியிள்ளது.
தி கேரளா ஸ்டோரியைத் தொடர்ந்து சர்ச்சையைக் கிளப்பும் திப்பு சுல்தான் டீசர்!
Published on
Updated on
1 min read

தி கேரளா ஸ்டோரி திரைப்படம் கிளப்பிய பரபரப்பு முடிவதற்குள் திப்பு சுல்தான் குறித்த புதிய படத்தின் டீசர்  சர்ச்சையைக் கிளப்பியிள்ளது.

சுதிப்தோ சென் இயக்கியுள்ள தி கேரளா ஸ்டோரி திரைப்படம் கடும் சர்ச்சைகளுக்கு மத்தியில் கடந்த வாரம் வெளியானது.  இஸ்லாமிய சமூகத்தினரை கேவலமாக சித்திரித்துள்ளதாக இப்படத்தின் மீது  கடுமையான எதிர்ப்புகள் எழுந்துள்ளன.

பலத்த எதிர்ப்புகளுக்கு மத்தியில் பிரதமர் நரேந்திர மோடி, மத்திய அமைச்சர்கள் படத்துக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். மேலும், பாஜக ஆளும் மத்தியப் பிரதேசத்தில் தி கேரளா ஸ்டோரி படத்துக்கு வரி விலக்கும் அளிக்கப்பட்டது.

இந்நிலையில்,   மைசூரின் புலி என அழைக்கப்படும் திப்பு சுல்தானின் வாழ்க்கையைத் தழுவி புதிய திரைப்படம் தயாராகி வருகிறது.

தற்போது இப்படத்தின் டீசர் வெளியாகி  சர்ச்சையைக் கிளப்பியுள்ளது. டீசர் விடியோவில், ‘8000 கோயில்களும் 27 கிறிஸ்துவ திருச்சபைகளும் அழிக்கப்பட்டன. 40 லட்சம் இந்துக்கள் மதமாற்றம் செய்யப்பட்டு மாட்டுக்கறி  உண்ணக் கட்டாயப்படுத்தப்பட்டனர். 1 லட்சத்திற்கும் அதிகமான இந்துக்கள் சிறைப்படுத்தப்பட்டனர். கோழிக்கோட்டில் 2,000 பிராமணக் குடும்பங்கள் அழிந்தன. இது வெறிபிடித்த சுல்தானின் கதை’ என்ற வசனங்களுடன் திப்பு சுல்தான் முகத்தில் கரியைப் பூசுவதுபோல் காட்சி இடம்பெற்றுள்ளது. 

இஸ்லாமியர்களுக்கு எதிராக, தி கேரளா ஸ்டோரி ஏற்படுத்திய அதிர்வுகள் மறைவதற்குள் திப்பு சுல்தான் குறித்த இந்த டீசர் புதிய சர்ச்சைகளுக்கு வழிவகுத்துள்ளது.

பவன் ஷர்மா இயக்கத்தில் ’திப்பு’ எனப் பெயரிடப்பட்டுள்ள இப்படத்தை ஈராஸ் இண்டர்னெஷனல்,  ராஷ்மி ஷர்மா ஃப்லிம்ஸ் நிறுவனங்கள் இணைந்து  தயாரிக்கின்றன. திப்பு சுல்தானாக சந்தீப் சிங் நடிக்கிறார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com