
இந்தியன் 2 திரைப்படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்புக்கு இயக்குநர் ஷங்கர் தயாராகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்துவந்த இந்தியன் 2 படம் விபத்து உள்ளிட்ட காரணங்களால் பாதியில் நின்றது. கமலின் ‘விக்ரம்’ மிகப்பெரிய வெற்றியைப் பெற்றதால் தற்போது ‘இந்தியன் 2’ படத்தை மீண்டும் தொடங்கியுள்ளனர்.
ஜெயமோகன் எழுத்தில் லைகா தயாரிப்பில் அனிருத் இசையில் ரவி வர்மா, ரத்னவேலு ஒளிப்பதிவில் உருவாகும் இந்தியன் 2 படத்தில் கமலுடன் இணைந்து சமுத்திரக்கனி, பாபி சிம்கா, காஜல் அகர்வால், சித்தார்த், ராகுல் பிரீத் சிங், பிரியா பவானி சங்கர் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர்.
இதையும் படிக்க: டியர் சாய் பல்லவி...நீங்கள் ஆகச் சிறந்தவர்... : சாய் பல்லவியை புகழ்ந்த இயக்குநர்!
இப்படத்தின் சமீப படப்பிடிப்பு தென் ஆப்பிரிக்காவில் மிகப்பிரம்மாண்டமாக எடுக்கப்பட்டது. அதன்பின், ஷங்கர் ராம் சரணை வைத்து இயக்கும் ‘கேம் சேஞ்சர்’ படப்பிடிப்புக்கு சென்றார். தற்போது, அப்படத்தின் படப்பிடிப்பு முடிந்துள்ளதாகவும் அடுத்து இந்தியன் 2 காட்சிகளை எடுக்கவுள்ளதாகவும் ஷங்கர் தெரிவித்துள்ளார்.
Wrapped up #GameChanger ‘s electrifying climax today! Focus shift to #Indian2 ‘s silver bullet sequence from tomorrow! pic.twitter.com/HDUShMzNet
— Shankar Shanmugham (@shankarshanmugh) May 9, 2023