
நடிகர் விஜய் சேதுபதி லியோ படம் குறித்துப் பேசியுள்ளார்.
விக்ரம் படத்தின் வெற்றிக்குப் பிறகு இயக்குநர் லோகேஷ் கனகராஜ் நடிகர் விஜய்யுடன் லியோ படத்தில் இணைந்துள்ளார். இதில் த்ரிஷா, சஞ்சய் தத் உள்ளிட்ட பல பிரபலங்கள் நடித்து வருகின்றனர்.
மிஷ்கின், சஞ்சய் தத், கௌதம் மேனன் ஆகியோர் காஷ்மீர் படப்பிடிப்பை முடித்துவிட்டதாக லோகேஷ் சமீபத்தில் கூறியிருந்தார். தற்போது சென்னையில் படப்பிடிப்பு நடந்து வருகிறது.
இதையும் படிக்க: அர்னால்ட் ஆவணப்படம்: டிரைலர் வெளியீடு
லோகேஷ் சினிமாட்டிக் யூனிவெர்ஸாக தயாராகி வரும் இப்படத்தில் நடிகர் விஜய் சேதுபதியும் நடிப்பார் என எதிர்பார்க்கப்பட்டது. இந்நிலையில், லியோவில் தான் நடிக்கவில்லை என்று விஜய் சேதுபதி தெரிவித்துள்ளார்.