வடிவேலு ரீமேக் செய்ய விரும்பும் திரைப்படம்!

நடிகர் வடிவேலு பிரபல  திரைப்படத்தை ரீமேக் செய்யும் ஆசையில் உள்ளதாக இயக்குநர் மாரி செல்வராஜ் தெரிவித்துள்ளார்.
வடிவேலு ரீமேக் செய்ய விரும்பும் திரைப்படம்!
Published on
Updated on
1 min read

நடிகர் வடிவேலு பிரபல  திரைப்படத்தை ரீமேக் செய்யும் ஆசையில் உள்ளதாக இயக்குநர் மாரி செல்வராஜ் தெரிவித்துள்ளார்.

பரியேறும் பெருமாள், கர்ணன் ஆகிய படங்களுக்குப் பின் உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் மாமன்னன் என்கிற படத்தை மாரி செல்வராஜ் இயக்கியுள்ளார். நீண்ட நாள்களாக தயாரிப்பிலிருக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் நிறைவு பெற்றது. 

இந்த படத்தில் கீர்த்தி சுரேஷ், வடிவேலு, ஃபஹத் பாசில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார்.

ரெட் ஜெயண்ட் மூவிஸ்  நிறுவனம் மாமன்னன் திரைப்படத்தை தயாரித்துள்ளது. தற்போது போஸ்ட் புரடக்‌ஷன் பணிகள் நடைபெற்று வருகிறது.  

இதில் அரசியல்வாதி தோற்றத்திலிருக்கும் வடிவேலுவின் புகைப்படம் படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரிக்கச் செய்துள்ளது.

இந்நிலையில், இயக்குநர் மாரி செல்வராஜ் நேர்காணல் ஒன்றில், ‘இந்தப் படத்தில், நான் என்ன சொல்ல வருகிறேன் என்பதை வடிவேலு சார் நடித்தால் எளிதாக திரையில் கடத்தப்படும் என நம்பினேன்.  அவர் இதில் நடிப்பார் என நம்பிக்கையில்லை. ஆனால், வடிவேலு ஒப்புக்கொண்டார். உண்மையில், அவருக்கு நிறைய விசயங்கள் தெரிந்திருக்கின்றன. லைஃப் இஸ் பியூட்டிஃபுல்(life is beautiful) திரைப்படத்தைப் பார்த்துவிட்டு ஒருநாள் இரவு முழுக்க நீ இப்படத்தை ரீமேக் செய்ய, நான் நடிக்க வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார். அந்த அளவிற்கு அவர் பலவற்றை தெரிந்து வைத்திருக்கிறார். என் படுக்கறையில் இளையராஜா மற்றும் வடிவேலுவின் புகைப்படங்களைத்தான் மாட்டியிருக்கிறேன்.’ எனக் குறிப்பிட்டுள்ளார்.

இயக்குநர் ராபர்டோ பெனிக்னி இயக்கத்தில் 1997 ஆம் ஆண்டு வெளியான இத்தாலிய திரைப்படம் லைப் இஸ் பியூட்டிஃபுல். ஆஸ்கர் உள்ளிட்ட பல விருதுகளைப் பெற்ற இத்திரைப்படம் உலகளவில் சிறந்த படங்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com