
நடிகர் அஜித்குமார் நடிப்பில் உருவாக உள்ள விடாமுயற்சி படத்திற்காக கதாநாயகி தேர்வு நடைபெற்று வருகிறது.
துணிவு படத்தைத் தொடர்ந்து அஜித்தின் புதிய படத்தை யார் இயக்குவார் என்கிற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் இருந்து. அந்த எதிர்பார்ப்புக்கு அஜித் குமாரின் பிறந்தநாளை முன்னிட்டு கடந்த மே 1 ஆம் தேதி அவரின் புதிய படம் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியானது.
இதையும் படிக்க: விஜய் - அர்ஜுன் சண்டைக்காட்சி படப்பிடிப்பு!
அதன்படி, அஜித்தின் அடுத்தப் படத்தை இயக்குநர் மகிழ் திருமேனி இயக்குவார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் படத்துக்கு விடாமுயற்சி எனவும் தலைப்பு வைத்துள்ளன்ர். லைகா நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்துக்கு அனிருத் இசையமைக்கிறார். நிரவ் ஷா ஒளிப்பதிவு செய்கிறார்.
இந்நிலையில், இப்படத்தில் அஜித்துக்கு ஜோடியாக நடிக்க வைக்க ஐஸ்வர்யா ராஜ், த்ரிஷா, கரீனா கபூர், கங்கனா ரணாவத் உள்ளிட்ட நடிகைகளுடன் தயாரிப்பு நிறுவனம் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.