

நடிகர் சிம்புவிற்கு மாநாடு, வெந்து தணிந்தது காடு, பத்து தல என ஹாட்ரிக் ஹிட் அடித்தது. இதனை தொடர்ந்து கமல்ஹாசன் தயாரிப்பில் 48வது படத்தில் நடிக்க உள்ளார். இந்தப் படத்தினை தேசிங்கு பெரியசாமி இயக்க உள்ளார்.
இதையும் படிக்க: இணையத்தில் தீயாக பரவும் அதுல்யா ரவியின் புகைப்படங்கள்!
சமூக வலைதளங்களில் சிம்பு 48 படத்தில் நடிகை தீபிகா படுகோன் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பான் இந்திய படமாக உருவாகவுள்ள இந்தப் படத்திற்கு ரூ.100 கோடி பட்ஜெட் ஆகுமென தகவல் வெளியாகியுள்ளது. இதனால் தீபிகா படுகோன் கதாநாயகியாக இருந்தால் பொருத்தமாக இருக்குமென தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதையும் படிக்க: பாயும் ஒளி நீ எனக்கு: புதிய அப்டேட்!
அதிகாரபூர்வ தகவல் வெளியாகத நிலையில் இது குறித்து விரைவில் அறிவிப்பு வருமென எதிர்பார்க்கப்படுகிறது. அப்படி தீபிகா படுகோன் நடித்தால் இது அவருக்கு இரண்டாவது தமிழ் படமாக இருக்கும். முதல் படம் கோச்சடையான் என்பது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.