
தமிழ் சினிமாவின் குறிப்பிடத்தக்க இயக்குநர்களில் ஒருவர் பா. ரஞ்சித். அவரத் தயாரிப்பு நிறுவனமான நீலம் புரடக்ஷனில் வெளியான பரியேறும் பெருமாள், சார்பட்டா, ரைட்டர், குண்டு போன்ற படங்கள் நல்ல வரவேற்பினை பெற்றது குறிப்பிடத்தக்கது.
தினேஷ், ஊர்வசி, மாறன், கவிதா பாரதி நடிப்பில் உருவாகியுள்ள படம் ஜே. பேபி. இயக்குநர் பா. இரஞ்சித்தின் நீலம் புரொடக்ஷன்ஸ் தயாரித்துள்ளது.
இதையும் படிக்க: தனுஷ் பட இயக்குநருடன் இணையும் துல்கர் சல்மான்!
சுரேஷ் மாரி இயக்கியுள்ள இப்படத்துக்கு இசை - டோனி பிரிட்டோ. சமீபத்தில் இந்தப் படத்தின் டீசர் வெளியானது.
தற்போது அன்னையர் தினத்தினை முன்னிட்டு ஊர்வசிக்கு வாழ்த்து தெர்விக்கும் விதமாக படத்தின் புதிய போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது.
முக்கிய செய்திகளை உடனுக்குடன் பெற... 'தினமணி'யின் வாட்ஸ்ஆப் செய்திச் சேவையில் இணைந்திருங்கள்...
தினமணி channel on WhatsApp: https://whatsapp.com/channel/0029Va60JxGFcowBIEtwvB0G