
கார்த்தியின் ஜப்பான் பட டீசரை படக்குழு நேற்று வெளியிட்டுள்ளது.
’ஜிப்ஸி’ படத்துக்குப் பிறகு ராஜுமுருகன் இயக்கி வரும் படம் ‘ஜப்பான்’. இதில் கார்த்தி நாயகனாகவும், அனு இமானுவேல் நாயகியாகவும் நடிக்கின்றனர். மேலும் தெலுங்கு நடிகர் சுனில், இயக்குநர் விஜய் மில்டன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.
இந்தப் படத்தை ட்ரீம் வாரியர்ஸ் பிக்சர்ஸ் தயாரிக்கிறது. ஜி.வி.பிரகாஷ்குமார் இசையமைக்கும் இப்படத்திற்கு ரவிவர்மன் ஒளிப்பதிவு செய்கிறார். திருச்சியில் நடந்த உண்மை சம்பவத்தை பின்னணியாகக் கொண்டு ஜப்பான் திரைப்படத்தின் கதை அமைக்கப்பட்டுள்ளது.
படம் வரும் தீபாவளி பண்டிகைக்கு திரைக்கு வரவிருக்கிறது. இந்த நிலையில் கார்த்தியின் பிறந்த நாளை முன்னிட்டு நேற்று படத்தின் அறிமுக டீசரை படக்குழு வெளியிட்டது. தற்போது இந்த டீசர் இணையதளங்களில் வைரலாகி வருகிறது.