தமிழில் விஜய், சூர்யா, சிவகார்த்திகேயன் போன்ற முன்னணி ஹீரோக்களுக்கு ஜோடியாக கமர்ஷியல் படங்களில் நடித்துவந்த கீர்த்தி சுரேஷுக்கு மறைந்த நடிகை சாவித்ரியின் வாழ்க்கை வரலாறான மகாநடி (நடிகையர் திலகம்) திருப்புமுனையாக அமைந்தது.
இதனையடுத்து கமர்ஷியல் படங்களுடன் தனி கதாநயாகியாகவும் படங்களில் அசத்தி வருகிறார். அப்படி அவர் தனி கதாநாயகியாக நடித்த மிஸ் இந்தியா, பென்குயின் எதிர்பார்த்த வெற்றியைப் பெறவில்லை எனினும் சாணிக் காயிதம் நல்ல வரவேற்பினைப் பெற்றது.
தெலுங்கில் நானிக்கு ஜோடியாக தசரா படத்தில் வெண்ணிலா கதாபாத்திரத்தில் நடித்ததிற்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலினுக்கு ஜோடியாக நடித்துள்ள மாமன்னன் படம் விரைவில் வெளியாக உள்ளது.
இதையும் படிக்க: மலையாளத்தில் அறிமுகமாகும் ஐஸ்வர்யா ராய்?
நேற்றிரவு ரகு தாத்தா படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்ததை தெரிவித்து இருந்தார். தற்போது அவரது அக்கா ரேவதி சுரேஷ் ‘தேங்க் யூ’ என்ற குறும்படத்தினை இயக்கியுள்ளார். இன்று மாலை கீர்த்தி சுரேஷ் யூடியூப் பக்கத்தில் இந்த குறும்படம் வெளியாகயுள்ளது குறிப்பிடத்தக்கது. இதனையொட்டி நடிகை கீர்த்தி சுரேஷ் குடும்பத்துடன் திருப்பதி சென்று சாமி தரிசனம் செய்துள்ளார். இவரை பார்த்ததும் ரசிகர்கள் சூழ்ந்து விட்டனர்.
திருப்பதியில் செய்தியாளர்களிடம் கீர்த்தி சுரேஷ் கூறியதாவது:
நீண்ட நாள்களுக்குப் பிறகு ஏழுமலையானை சந்தித்தது மகிழ்ச்சியாக உள்ளது. எனது அக்கா இயக்குநராக அறிமுகமாகியுள்ளார். அதற்காகவே இங்கு வந்துள்ளோம். விரைவில் போலா ஷங்கர் படம் வர உள்ளது.