மாமன்னன் படத்தின் புதிய அப்டேட்!

மாமன்னன் படத்தின் புதிய அப்டேட்டை படக்குழு வெளியிட்டுள்ளது.
கோப்புப்படம்
கோப்புப்படம்

மாமன்னன் படத்தின் புதிய அப்டேட்டை படக்குழு வெளியிட்டுள்ளது.

பரியேறும் பெருமாள், கர்ணன் ஆகிய படங்களுக்குப் பின் உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் மாமன்னன் என்கிற படத்தை மாரி செல்வராஜ் இயக்கியுள்ளார். நீண்ட நாள்களாக தயாரிப்பிலிருக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் நிறைவு பெற்றது.

மேலும், இந்த படத்தில் கீர்த்தி சுரேஷ், வடிவேலு, ஃபஹத் பாசில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசை அமைத்திருக்கிறார்.

ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்தில் வடிவேலு பாடிய பாடல் வெளியாகி மாபெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

ஜூன் 1 ஆம் தேதி சென்னையில் நேரு உள்விளையாட்டு அரங்கில் மாமன்னன் திரைப்படத்தின் இசை மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா நடைபெறவுள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது.

இந்நிலையில், மாமன்னன் படத்தின் 2வது இரண்டாவது பாடல் இன்று(மே.27) வெளியாகியுள்ளது. யுகபாரதி எழுதியுள்ள இப்பாடலை ஏ.ஆர்.ரகுமான் பாடியுள்ளார். இந்த பாடல் இணையத்தில் வைரலாகி வருகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com