டி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!மாநிலங்களவை அதிமுக வேட்பாளராக தம்பிதுரை அறிவிப்பு - பாமகவுக்கு ஒரு இடம்!முஸ்லிம்கள் கொல்லப்படுவதில் மேற்கு வங்கம் முதலிடம் - பாஜக குற்றச்சாட்டு! திருச்சி சிவா, பேராசிரியர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் - மாநிலங்களவை திமுக வேட்பாளர்களாக போட்டியிடுகின்றனர்மாநிலங்களவை உறுப்பினர் ஆகிறார் பிகார் முதல்வர் நிதீஷ் குமார்?28 பேரவை, 1 மாநிலங்களவை : கூட்டணி பங்கீட்டில் மனநிறைவு - செல்வப்பெருந்தகை
/

கீர்த்தி சுரேஷ் திருமண வதந்திக்கு முற்றுப்புள்ளி! 

நடிகை கீர்த்தி சுரேஷ் திருமணம் குறித்த வதந்திக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது. 

News image
Updated On :30 மே 2023, 11:00 am

DIN

தமிழில் விஜய், சூர்யா, சிவகார்த்திகேயன் போன்ற முன்னணி ஹீரோக்களுக்கு ஜோடியாக கமர்ஷியல் படங்களில் நடித்துவந்த கீர்த்தி சுரேஷுக்கு மறைந்த நடிகை சாவித்ரியின் வாழ்க்கை வரலாறான மகாநடி (நடிகையர் திலகம்) திருப்புமுனையாக அமைந்தது.

இதனையடுத்து கமர்ஷியல் படங்களுடன் தனி கதாநயாகியாகவும் படங்களில் அசத்தி வருகிறார். அப்படி அவர் தனி கதாநாயகியாக நடித்த மிஸ் இந்தியா, பென்குயின் எதிர்பார்த்த வெற்றியைப் பெறவில்லை எனினும் சாணிக் காயிதம் நல்ல வரவேற்பினைப் பெற்றது. 

Story image

தெலுங்கில் நானிக்கு ஜோடியாக தசரா படத்தில் வெண்ணிலா கதாபாத்திரத்தில் நடித்ததிற்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலினுக்கு ஜோடியாக நடித்துள்ள மாமன்னன் படம் விரைவில் வெளியாக உள்ளது.  

துபாய் தொழிலதிபர் பர்ஹான் உடன் கீர்த்தி சுரேஷ் திருமணம் செய்ய உள்ளதாக சமீபத்தில் வதந்திகள் பரவியது. இருவரும் ஒரே நிறத்திலான ஆடையை அணிந்ததால் இதுமாதிரி வதந்தி பரவியது. 

Story image

இந்நிலையில் கீர்த்தி சுரேஷின் தந்தையும் தயாரிப்பாளருமான சுரேஷ்குமார் வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார். அவர், “கீர்த்தி சுரேஷ் பர்ஹானுடன் டேட்டிங் செல்லவில்லை. அவர் ஒரு குடும்ப நண்பர் மட்டுமே. சில மீடியாக்கள் தவறாக செய்திகளை பரப்பிவிட்டன. ரசிகர்கள் இதை நம்ப வேண்டாம். திருமணம் குறித்து உண்மையான செய்தியை நாங்களே அதிகாரபூர்வமாக தெரிவிப்போம்” எனக் கூறினார். 

தற்போது நடிகை கீர்த்தி சுரேஷ் சைரன், ரிவால்வர் ரீட்டா ஆகிய படங்களில் நடித்து வருகிறார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.