இசைஞானி இளையராஜாவின் வாழ்க்கை வரலாறு படமாக எடுக்கப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தேனி மாவட்டம் பண்ணையபுரத்தில் பிறந்த இளையராஜா, 1970களில் தமிழ் சினிமாவுக்குள் நுழைந்து இன்றுவரை தனக்கென தனி ராஜ்ஜியம் நடத்தி வருகிறார்.
உலகம் முழுவதும் கோடிக்கணக்கான ரசிகர்களை கொண்டுள்ள இளையராஜா, ஆயிரத்துக்கும் மேற்பட்ட படங்களுக்கு இசையமைத்துள்ளார். நூற்றுக்கணக்கான விருதுகளையும் பெற்றுள்ளார்.
இந்த நிலையில், இயக்குநர் பால்கி இயக்கத்தில் இளையராஜாவின் வாழ்க்கை வரலாறு திரைப்படமாகவுள்ளது.
இந்த படத்தின் கதாநாயகனாக இளையாராஜாவின் தீவிர ரசிகரும், மிக நெருங்கியவருமான நடிகர் தனுஷ் நடிப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
நடிகர் தனுஷ் தற்போது நடித்து முடித்துள்ள கேப்டன் மில்லர் திரைப்படம் விரைவில் திரைக்கு வரவுள்ள நிலையில், அவரது 50-வது படத்தின் படப்பிடிப்பும் தீவிரமாக நடைபெற்று வருகின்றது.
இதையும் படிக்க | கங்கனாவின் திரைப்படத்தைப் பார்த்து கண்கலங்கிய யோகி ஆதித்யநாத்!
இந்த நிலையில், இளையராஜாவின் வாழ்க்கை வரலாறு படத்தின் படப்பிடிப்பு அடுத்தாண்டு தொடங்கி, 2025-இல் திரைக்கு வரும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.