படம்: எக்ஸ்
படம்: எக்ஸ்

வைரலான ராஷ்மிகாவின் ஆபாச மார்பிங் விடியோ: அமிதாப் பச்சன் கண்டனம்!

நடிகை ராஷ்மிகா மந்தனாவை ஆபாசமாக சித்தரித்து இணையத்தில் பதிவேற்றிய நபருக்கு நடிகர் அமிதாப் பச்சன் கண்டனம் தெரிவித்துள்ளார். 
Published on

தமிழ் மற்றும் தெலுங்கில் பிரபல நடிகையாக இருப்பவர் நடிகை ராஷ்மிகா மந்தனா. இவர் நடிப்பில் வெளியான ‘புஷ்பா’, ‘சீதாராமம்’ உள்ளிட்ட படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றுத்தந்தன. 

‘புஷ்பா’ படத்தில் நடித்த ராஷ்மிகா இந்திய அளவில் அதிகமான ரசிகர்களை கவர்ந்ததுடன் அப்படம் அவருக்கு பெரிய திருப்புமுனையாகவும் அமைந்தது. தமிழில் வாரிசு படத்தின் மூலமும் ரசிகர்களிடையே மிகவும் கவனம் பெற்றார். 

அமிதாப் பச்சனுடன் சேர்ந்து பாலிவுட்டிலும் கால்பதித்துவிட்டார். ‘குட்ஃபை’ எனும் இந்தப்படம் விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பினை பெற்றது. 2வது ஹிந்திப்படமாக சித்தார்த் மல்லோத்ராவுடன் இணைந்து நடித்துள்ளார்.

இந்நிலையில் சமூக வலைதளங்களில் ராஷ்மிகா மந்தனா வைரலாகியுள்ளார். அவரது மார்பிங் செய்யப்பட்ட விடியோ ஒன்று இணையத்தில் அதிகம் பகிரப்பட்டதே இதற்கு காரணம். இதைப் பார்த்த நடிகர் அமிதாப் பச்சன் தனது எக்ஸ் பதிவில் சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டுமெனக் கூறியுள்ளார். 

நடிகர்கள், நடிகைகள் புகைப்படங்கள் மார்பிங் செய்வது எப்போதும் இருந்துவரும் அருவறுக்கதக்க செயலாக இருந்தாலும் தற்போது முற்றிலும் உண்மையாக இருப்பது போல போலியான ஒன்றினை உருவாக்குகிறார்கள். செயற்கை நுண்ணறிவின் (ஏஐ) வளர்ச்சி இப்படியான தீயப் பழக்கங்களுக்கு உபயோகிக்கப்படக்கூடாதென இணையவாசிகள் பலரும் கருத்து தெரிவித்துள்ளார்கள். 

அந்த விடியோவில் இருப்பது ஜாரா பாட்டீல். இன்ஸ்டாகிராமில் அக்.9 அன்று பதிவிட்ட அந்த விடியோவினைதான் ராஷ்மிகா போல எடிட்டிங் செய்திருக்கிறார்கள். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

X
Dinamani
www.dinamani.com