
ஷபானா - பள்ளி சீருடையில்
செம்பருத்தி தொடரில் முதன்மை பாத்திரத்தில் நடித்த நடிகை ஷபானாவின் பள்ளி காலப் புகைப்படங்கள் இணையத்தில் பலரால் பகிரப்பட்டு வருகிறது.
பள்ளி சீருடையில் ஆசிரியர் மற்றும் சக மாணவர்களுடன் அமர்ந்து எடுத்துக்கொண்ட புகைப்படத்தை அவரின் ரசிகர்கள் பகிர்ந்து வருகின்றனர்.
ஜீ தமிழில் ஒளிபரப்பாகும் செம்பருத்தி தொடரில் நாயகியாக நடித்தவர் நடிகை ஷபானா. கேரளத்தை சேர்ந்த இவர், செம்பருத்தி தொடரில் நடித்ததன் மூலம் தமிழ்நாட்டு ரசிகர்கள் மனதில் நீங்கா இடம்பிடித்துள்ளார்.
இவர் இதற்கு முன்பு ஸ்ரீதேவி என்ற மலையாள தொடரில் நடித்தார். தற்போது சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிவரும் மிஸ்டர் மனைவி தொடரில் நடித்து வருகிறார்.
செம்பருத்தி தொடரில் நடித்ததன் மூலம் பலதரப்பட்ட ரசிகர்களைக் கவர்ந்த ஷபானா, மிஸ்டர் மனைவி தொடரின் மூலம் தனது ரசிகர்களைக் கவர்ந்து வருகிறார். இதனால் மிஸ்டர் மனைவி தொடருக்கு வரவேற்பும் அதிகம் காணப்படுகிறது. இந்தத் தொடர் அதிக டிஆர்பி பெறும் தொடர்களில் ஒன்றாக உள்ளது.
இவர் ஆர்யன் என்ற சின்னத்திரை நடிகரை திருமணம் செய்துகொண்டார். ஆர்யன் தற்போது மீனாட்சி பொண்ணுங்க தொடரில் நாயகனாக நடித்துவருகிறார்.
இந்நிலையில், ஷபானாவின் பள்ளி கால புகைப்படத்தை அவரின் தோழி இணையத்தில் பகிர்ந்துள்ளார்.
இந்தப் படத்தை ரசிகர்கள் பலர் பகிர்ந்தும், ஷபானாவைக் குறிப்பிட்டும் கருத்துக்களைப் பதிவிட்டு வருகின்றனர். ஆசிரியர் மற்றும் சக மாணவர்களுடன் அமர்ந்து குழுவாக எடுத்துக்கொண்ட புகைப்படம் வைரலாகி வருகிறது.

செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...