
கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ராகவா லாரன்ஸ், எஸ்.ஜே. சூர்யா, இளவரசு, நிமிஷா சஜயன், சஞ்சனா நடராஜன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படத்தில் நடித்துள்ளார்கள்.
2017இல் ஃபகத் பாசில் நடிப்பில் வெளியான தொண்டிமுதலும் த்ரிசாக்ஷியும் படத்தில் அறிமுகமான நடிகை நிமிஷா சஜயன் பல அற்புதமான மலையாள படங்களில் நடித்துள்ளார்.
ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படம் நல்ல வரவேற்பினை பெற்றுவரும் நிலையில் இதில் மலையரசியாக நடித்த பிரபல மலையாள நடிகை நிமிஷா சஜயன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் படப்பிடிப்பில் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை பதிவிட்டுள்ளார்.
இதையும் படிக்க: ஏமாற்றி வெல்லும் ஹீரோக்கள்! கார்த்திக் சுப்புராஜின் தந்திரம்?
அதில் மலையரசி எனப் பதிவிட்டு இதயம் எமோஜியுடன் பகிர்ந்துள்ளார். பழங்குடிப் பெண்ணாக நடிப்பில் அசத்தியிருக்கிறார் நிமிஷா.
நடிகை நிமிஷா மலையாளத்தில் மட்டுமல்லாமல் தமிழிலும் நல்ல கதைகளை தேர்வு செய்து நடிக்கிறார். சமீபத்தில் சித்தார்த்த் நடிப்பில் வெளியான ‘சித்தா’ படத்திலும் நிமிஷா சிறப்பான கதாபாத்திரத்தில் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.