தெலுங்கில் முன்னணி நடிகராக இருப்பவர் நானி. வித்தியாசமான கதைகளை தேர்ந்தெடுத்து நடிப்பதில் ஆர்வம் உடையவர். இவரது முந்தைய படங்களான ‘ஷியாம் சிங்கா ராய்’, ‘அடடே சுந்தரா’ திரைப்படம் அமோக வரவேற்பினைப் பெற்றது. அதனைத் தொடர்ந்து வெளியான 'தசரா' கலவையான விமர்சனங்களை பெற்றன.

இதையும் படிக்க: நான் எந்தப் படத்தையும் காப்பியடிக்கவில்லை: அட்லி
நானியின் 30வது படமாக 'ஹாய் நான்னா' படம் உருவாகியுள்ளது. இதில் நானியுடன் மிருணாள் தாக்குர் நடித்துள்ளார். 31வது படமாக அடடே சுந்தரா படத்தின் இயக்குநருடன் நானி இணைந்துள்ளார். அடடே சுந்தரா படம் விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பினை பெற்றதால் இந்தக்கூட்டணி மீது எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

இதையும் படிக்க: நள்ளிரவில் வெளியான ஜோதிகா-மம்மூட்டியின் ‘காதல்’ பட டிரைலர்!
டிவிவி என்டர்டெர்யின்மென்ட் தயாரிக்கும் இந்தப் படத்துக்கு ‘சரிபோத சனிவாரம்’ எனப் பெயரிடப்பட்டுள்ளது. இதில் பிரியங்கா மோகன் நடிக்கிறார். ஏற்கனவே கேங்ஸ்டர் படத்தில் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது. முரளி ஜி. ஒளிப்பதிவு. ஜேக்ஸ் பிஜோய் இசையமைக்கிறார்.
இதையும் படிக்க: ஏமாற்றி வெல்லும் ஹீரோக்கள்! கார்த்திக் சுப்புராஜின் தந்திரம்?
இந்தப் படத்தில் நடிகர் எஸ்.ஜே.சூர்யாவும் இணைந்துள்ளது ரசிகர்கள் மத்தியில் ஆர்வத்தை தூண்டியுள்ளது.
இந்நிலையில் படத்தின் படப்பிடிப்பு சண்டைக்காட்சிகளுடன் தொடங்கியதாக படக்குழு தனது எக்ஸ் பக்கத்தில் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.
We started the shoot of #SaripodhaaSanivaaram today with an action episode pic.twitter.com/wqi6wyK4Rw
â DVV Entertainment (@DVVMovies) November 13, 2023
நானியின் ஹாய் நான்னா டிச.7ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

குமரியில் புதிய ரயில்வே கோட்டம்: மத்திய அமைச்சரிடம் எம்.பி. வலியுறுத்தல்

திருப்பூா் குமரன் மணி மண்டபம் கட்டுமானப் பணி! சென்னிமலையில் அமைச்சா்கள் ஆய்வு!

கடலூா் ஆட்சியா் அலுவலகம் அருகே பண்ணை நிலத்தில் தீ
சிலிண்டா் வெடித்து விபத்து! பலியானோர் குடும்பத்துக்கு தலா ரூ. 3 லட்சம் நிதியுதவி: முதல்வா் அறிவிப்பு
விடியோக்கள்

Duster காரை ஓட்டிப் பார்த்து ஆய்வு செய்த முதல்வர்! | CM Vijay |



