அவள் பெயர் ரஜ்னி: டிரைலர் வெளியீட்டு விழாவில் லோகேஷ் கூறியது என்ன? 

நடிகர் காளிதாஸ் ஜெயராம் ‘அவள் பெயர் ரஜ்னி’ டிரைலர் வெளியீட்டு விழாவில், நடிகர் விஜய்யின் வசனத்தை குறிப்பிட்டு பேசியுள்ளார். 
அவள் பெயர் ரஜ்னி: டிரைலர் வெளியீட்டு விழாவில் லோகேஷ் கூறியது என்ன? 

நவரசா ஃபிலிம்ஸ் தயாரிப்பில், இயக்குநர் வினில் ஸ்கரியா வர்கீஸ் இயக்கத்தில் காளிதாஸ் ஜெயராம் நடிக்கும் “அவள் பெயர் ரஜ்னி” படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா சென்னையில் படக்குழுவினர் கலந்து கொள்ளப் பத்திரிக்கை ஊடக நண்பர்கள் முன்னிலையில் நடைபெற்றது. 

இவ்விழாவினில் பிரபல இயக்குநர் லோகேஷ் கனகராஜ் கலந்து கொண்டு படக்குழுவினரை வாழ்த்தினார். இயக்குநர் வினில் ஸ்கரியா வர்கீஸ், “என் படம் தமிழ், மலையாளம் மொழிகளில் வரவுள்ளது. படம் பாருங்கள் கண்டிப்பாக மிகவும் பிடிக்கும், இப்படத்தில் உழைத்த அனைவருக்கும் நன்றி. தயாரிப்பாளர் ஸ்ரீதர் சாருக்கு நன்றி. லோகேஷ் பிரதருக்கு பெரிய நன்றி. படத்திற்கு ஆதரவு தாருங்கள் நன்றி. இந்தப்படம் இது வரை நீங்கள் பார்க்காத திரில்லர் அனுபவத்தைத்  தரும். படத்தை அனைவரும் திரையரங்கில் பார்த்து ஆதரவு தாருங்கள்” எனக் கூறினார். 

நடிகர் காளிதாஸ் ஜெயராம், “விஜய் சார் சொன்ன வாழ்க்கை ஒரு வட்டம் வசனம்தான் ஞாபகம் வருகிறது. இதே இடத்தில் கமல் சார் என் கை பிடித்து, 10 வருடத்திற்கு முன் நடிகனாக என்னை அறிமுகப்படுத்தினார். இப்போது எனக்குப் பிடித்த இயக்குநர், எனக்கு விக்ரம் தந்த லோகேஷ் இங்கு வந்து இந்தப்படத்தைப் பெரிய படமாக்கியிருக்கிறார் நன்றி. தயாரிப்பாளர் காத்திருந்து, இப்படத்தை தியேட்டருக்கு கொண்டுவந்ததற்கு நன்றி. வித்தியாசம் என்று சொன்னாலே எல்லோரும் சொல்வது போல் ஆகிவிடும் ஆனால் உண்மையிலேயே இந்தப் படம் நான் இதுவரை செய்யாத ரோலில் மிக வித்தியாசமானதாக இருக்கும். பார்த்துவிட்டு சொல்லுங்கள் நன்றி” எனப் பேசினார்.  

இயக்குநர் லோகேஷ் கனகராஜ், “இன்று நான் செய்வது பெரிய படமாக இருக்கலாம் ஆனால் மாநகரம் செய்யும் போது சிறிய படமாகத்தான் இருந்தது. சிறிய படம் நன்றாக இருந்தால் பத்திரிக்கையாளர்கள் கண்டிப்பாக ஆதரவு தருவார்கள். சினிமாவில் எதைப் பற்றிப் பேச வேண்டும் என்றாலும், ஒரு ஃபோன்காலில் ஆபிஸ் வந்து விடுவார் காளிதாஸ். சினிமா மீது அவருக்கு மிகப்பெரிய காதல் இருக்கிறது. அவருக்காக என் உதவி இயக்குநர்கள் நிறைய கதை எழுதி வருகிறார்கள். அவர் மிகச் சிறந்த நடிகர். இந்தப் படத்தின் டிரைலர் ஆர்வத்தை ஏற்படுத்துகிறது. படமும் நன்றாக இருக்கும் என நம்புகிறேன். படம் வெற்றி பெற வாழ்த்துகள்” எனக் கூறினார். 

விஜய், த்ரிஷா நடிப்பில் லோகேஷ் இயக்கிய லியோ வெற்றிகரமாக திரையில் ஓடிக்கொண்டிருக்கிறது. தற்போது ரஜினி 171 படத்துக்கான கதையை எழுதி வருகிறார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com