பெண் நட்பின் மீது நம்பிக்கை கொடுத்தவள்: எதிர்நீச்சல் ஆதிரை உருக்கம்!

ஹரிபிரியா - சத்யாவின் புகைப்படங்களை ரசிகர்கள் பகிர்ந்து கருத்துகளைப் பதிவிட்டு வருகின்றனர். 
சத்யா தேவராஜன் / ஹரிபிரியா இசை
சத்யா தேவராஜன் / ஹரிபிரியா இசை
Published on
Updated on
2 min read

பெண் நட்பின் மீது நம்பிக்கை ஏற்பட்டதற்கு மிக முக்கிய காரணம் நடிகை ஹரிபிரியா இசை என நடிகை சத்யா தேவராஜன் தெரிவித்துள்ளார்.  

சன் தொலைக்காட்சியில் வாரத்தின் அனைத்து நாள்களிலும் எதிர்நீச்சல் தொடர் ஓளிபரப்பாகி வருகிறது. இந்தத் தொடரில் ஆதிரை பாத்திரத்தில் நடிகை சத்யா தேவராஜன் நடித்து வருகிறார். இதேபோன்று நந்தினி பாத்திரத்தில் நடிகை ஹரிபிரியா இசை நடித்து வருகிறார். 

மூன்று மருமகள்களை மையமாக வைத்து எதிர்நீச்சல் தொடர் எடுக்கப்படடு வருகிறது. இதில் இரண்டாவது மருமகளாக வருபவர் நந்தினி. 

எதிர்நீச்சல் தொடரில் நந்தினி பாத்திரத்திற்கு தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. பெரும் ஆணாதிக்கம் கொண்டவராக வரும் ஆதி குணசேகரனை நேருக்கு நேர் நின்று எதிர்த்து பேசும் நந்தினியின் காட்சிகள், ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்தவை.

ஆதி குணசேகரனின் தங்கை பாத்திரத்தில் நடித்து வருபவர் நடிகை சத்யா தேவராஜன் (ஆதிரை). கரிகாலன் உடனான ஆதிரையின் காட்சிகள் மக்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றவை.

இந்நிலையில் எதிர்நீச்சல் தொடரில் ஹரிபிரியாவும், சத்யாவும் நெருக்கமாகியுள்ளனர். அவர்களின் குறும்புத்தன விடியோக்களை சமூகவலைதளத்தில் அவ்வபோது பகிர்ந்து வருவது வழக்கம். 

அந்தவகையில்,  நடிகை ஹரிபிரியாவுடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை நடிகை சத்யா சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளார். அதில், பெண்கள் நட்பின் மீது மீண்டும் நம்பிக்கை ஏற்படுத்தியதற்கு நன்றி. அன்பு சகோதரியாக இருப்பதற்கும் நன்றி. தோழியாகவும் என் நலம் விரும்பியாகவும் நீ இருக்கிறாய். உனக்கான நான் என்றுமே இருப்பேன் என்பதை மறந்துவிடாதே! படப்பிடிப்பு இல்லையென்றாலும் உன்னுடன் இதுபோன்ற நெருக்கத்துடன் எப்போதுமே இருக்க வேண்டும் எனப் பதிவிட்டுள்ளார். 

ஹரிபிரியா - சத்யாவின் புகைப்படங்களை ரசிகர்கள் பகிர்ந்து கருத்துகளைப் பதிவிட்டு வருகின்றனர். 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com