மேட்டூர் அணையிலிருந்து தண்ணீர் திறந்துவைத்தார் முதல்வர் விஜய்!ரஷியா, சீன அதிபர்களுடன் பிரதமர் மோடி சந்திப்புபுகைப்படம் எடுக்கும் வசதி இல்லாத கைப்பேசிக்கு தடையில்லை: அமைச்சர்சென்னையில் வணிகப் பயன்பாட்டு சிலிண்டர் விலை உயர்வுதமிழ்நாட்டில் சுங்கச் சாவடிகளில் இன்று முதல் கட்டணம் உயர்வு!

அர்ஜுன் ரெட்டி இயக்குநர் படத்தில் பிரபாஸ்! 

பிரபல தெலுங்கு இயக்குநர் சந்தீப் ரெட்டி வங்கா இயக்கத்தில் பிரபாஸ் நடிக்க உள்ளதாக நிகழ்ச்சி ஒன்றில் இயக்குநர் தெரிவித்தார். 

Published On :2 பிப்ரவரி 2024, 8:55 am IST

‘அர்ஜுன் ரெட்டி’ படத்தின் மூலம் புகழ் பெற்ற இயக்குநர் சந்தீப் ரெட்டி வங்கா இயக்கத்தில் உருவாகியுள்ள அனிமல் படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியாகியது.

நடிகர் ரன்பீர் கபூர், ராஷ்மிகா நடித்துள்ள இந்தப் படத்திற்கு மத்திய தணிக்கை வாரியம்  ‘ஏ’ சான்றிதழ் அளித்துள்ளது. படத்தின் மொத்த நேரம் 3 மணி நேரம் 21 நிமிடங்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

படத்தில் வன்முறை காட்சிகள் ரத்தம் தெறிக்கக் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. அப்பா மகனுக்கிடையில் நடைபெறும் கதையாக உருவாகியுள்ள படம், ரசிகர்களிடம் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. 

Story image

சமீபத்திய அனிமல் பட புரமோஷன் நிகழ்ச்சியில் இயக்குநர் சந்தீப் ரெட்டி வங்கா தனது அடுத்தப் படம் நடிகர் பிரபாஸுடன் எனக் கூறியுள்ளார். இந்தப் படத்தில் பிரபாஸ் காவல்துறை அதிகாரியாக நடித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.  இந்தப் படத்துக்கு ஸ்பிரிட் எனப் பெயரிடப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது. 

அடுத்தாண்டு செப். படப்பிடிப்புகள் தொடங்க உள்ளதாக இயக்குநர் தகவல் தெரிவித்துள்ளார். இது நடிகர் பிரபாஸின் 25வது படம் என்பது குறிப்பிடத்தக்கது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.