நடிகை வனிதாவை தாக்கிய பிரதீப் ஆண்டனி ஆதரவாளர்!

பிரபல நடிகை வனிதா விஜயகுமார் தனது எக்ஸ் பதிவில் தன்னை கடுமையாக தாக்கியவர் பிரதீப் ஆண்டனி ரசிகர் எனக் கூறியுள்ளார். 
நடிகை வனிதாவை தாக்கிய பிரதீப் ஆண்டனி ஆதரவாளர்!

நடிகர் விஜயகுமாரின் மகளும் நடிகையுமான வனிதா விஜயகுமார் பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் மிகவும் பிரபலமானவராக அறியப்படுகிறார். வசந்த பாலன் இயக்கத்தில் வெளியான அநீதி படத்தில் வனிதாவின் நடிப்பு பலராலும் பாராட்டப்பட்டது குறிப்பிடத்தக்கது. 

தற்போது வனிதாவின் மகள் ஜோவிகா பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்று வருகிறார். சமீபத்தில் பிக்பாஸில் இருந்து பிரதீப் ஆண்டனி ரெட் கார்டு கொடுக்கப்பட்டு வெளியேற்றப்பட்டது சமூக வலைதளங்களில் பெரும் சர்ச்சையானது. அதற்கு காரணம் ஜோவிகா- மாயா குழுவினரே என பலரும் குற்றம்சாட்டியிருந்தனர். 

இந்நிலையில் வனிதா விஜயகுமார் தனது எக்ஸ் பதிவில், “யாரென்றே அடையாளம் தெரியாத பிரதீப் ஆண்டனி ஆதரவாளர் கடுமையாக என்னை தாக்கினார். பிக்பாஸ் சீசன் 7 குறித்த என்னுடைய விமர்சனத்தை முடித்துவிட்டு சாப்பிட்டுவிட்டு எனது காரை எடுக்க வந்தேன். எனது தங்கையின் வீட்டின் அருகே நிறுத்தப்பட்டு இருந்த காரை எடுக்க வந்தபோது எங்கிருந்தோ வந்த நபர் ‘ரெட் கார்டு  கொடுக்குறீங்களா?’ எனக் கேட்டவாரே என்னை தாக்கினார்” எனப் பதிவிட்டுள்ளார். 

அடுத்தப் பதிவில் அடிப்பட்ட தனது முகத்தினை பதிவிட்டு, “பிக்பாஸ் வெறும் பொழுதுபோக்கான விளையாட்டு நிகழ்ச்சி. இது எனக்கு தேவையில்லாதது” எனக் கூறியுள்ளார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com