‘விமர்சிப்பதற்கும் அறம் வேண்டும்’: அமீருக்கு சினேகன் ஆதரவு

ஒருவரை விமர்சிப்பதற்கும் அறம் தெரிந்திருக்க வேண்டும் என்று பாடலாசிரியர் சினேகன் தெரிவித்துள்ளார்.
‘விமர்சிப்பதற்கும் அறம் வேண்டும்’: அமீருக்கு சினேகன் ஆதரவு
Published on
Updated on
1 min read

ஒருவரை விமர்சிப்பதற்கும் அறம் தெரிந்திருக்க வேண்டும் என்று பாடலாசிரியர் சினேகன் தெரிவித்துள்ளார்.

இயக்குநரும் நடிகருமான அமீர், நேர்காணல் ஒன்றில், "கார்த்தியின் 25-வது பட நிகழ்வுக்கு என்னை யாரும் முறையாக அழைக்கவில்லை. மூன்றாம் நபரை விட்டு நிகழ்ச்சிக்கு அழைத்தால், வரக் கூடிய ஆள் நான் இல்லை. சம்பந்தப்பட்டவர் என்னை அழைக்கவில்லை. அதைவிட, பருத்திவீரன் படத்தால் தனக்கு மிகப்பெரிய மன உளைச்சலும் பொருளாதார ரீதியாக இழப்பும் ஏற்பட்டது" எனக் கூறியிருந்தது சர்சையை ஏற்படுத்தியது.

இதனைத் தொடர்ந்து, "என் பணத்தில்தான் சினிமாவை எப்படி எடுக்க வேண்டும் என்பதையே அமீர் கற்றுக்கொண்டார். அந்த அளவிற்கு பருத்துவீரனில் என்னை ஏமாற்றினார். அவரைப் பொறுத்துவரை உழைத்து சம்பாதிக்கக் கூடாது. யாராவது சிக்கினால் அவர்களிடம் திருட வேண்டும்" என கடுமையாக விமரித்தார்.

இந்த விவகாரத்தில் இயக்குநர் அமீருக்கு நடிகர் சசிகுமார், இயக்குநர் பொன்வண்ணன், சமுத்திரக்கனி உள்ளிட்டோர் ஆதரவு தெரிவித்திருந்த நிலையில், தற்போது பாடலாசிரியர் சினேகனும் தனது ஆதரவை அமீருக்கு தெரிவித்துள்ளார்.

இது குறித்து சினேகன் அவரது எக்ஸ் தளத்தில் தெரிவித்திருப்பதாவது:

"நான் இயக்குனர் அமீரோடு அவரின் முதல் படத்தில் இருந்து இன்று வரை தொடர்ந்து பணியாற்றி வருகிறேன்.

அவரின் நேர்மையை எடைப்போட்டு பார்க்கும் தகுதி  எவருக்கும் இல்லை.

பருத்தி வீரன் படத்தை முடிப்பதற்கு  அவர் எவ்வளவு சிரமத்திற்கு உள்ளானார் என்பது அவரோடு கூட பயணித்த என்னைப் போன்றவர்களுக்கு தான்  தெரியும்.

ஒருவரை விமர்சிப்பதற்கும் அறம் தெரிந்திருக்க வேண்டும்" எனத் தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com