
பிரபல செய்தி வாசிப்பாளரும், சீரியல் நடிகையுமான சரண்யா துராடி புது வீடு ஒன்றை வாங்கியுள்ளார்.
இவர் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ஆயுத எழுத்து, நெஞ்சம் மறப்பதில்லை, வைதேகி காத்திருந்தாள் ஆகிய தொடர்களில் நடித்திருந்தார்.
செய்திவாசிப்பாளராகவும் செய்தியாளராகவும் இருந்தவர் சரண்யா துராடி. நடிப்பின் மீது ஆர்வம் கொண்ட இவருக்கு 2017ஆம் ஆண்டு விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான நெஞ்சம் மறப்பதில்லை தொடர் மூலம் நடிகையாக சின்னத்திரையில் அறிமுகமானார்.
தொடர்ந்து, சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ரன் தொடரில் நாயகியாக சரண்யா நடித்தார். 2020ஆம் ஆண்டு ஆயுத எழுத்து தொடரில் முதன்மை பாத்திரத்தில் நடித்து பலரின் கவனத்தை ஈர்த்தார்.
தொடர்ந்து, வைதேகி காத்திருந்தால் தொடரிலும் நடித்து தனக்கென தனி ரசிகர்கள் கூட்டத்தை உருவாக்கினார்.
இதையும் படிக்க: குட் நைட் மணிகண்டன் நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு நிறைவு
இந்த நிலையில், சரண்யா துராடி புது வீடு ஒன்றை வாங்கியுள்ளார். புது வீட்டின் புகைப்படங்களை சரண்யா துராடி பகிர்ந்துள்ளார். இப்புகைப்படங்கள் சமுக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.