லியோ வெளியீட்டு உரிமம்.. விலகிய உதயநிதி?

லியோ வெளியீட்டு உரிமம்.. விலகிய உதயநிதி?

லியோ திரைப்படத்தின் தமிழக வெளியீட்டு உரிமை யாருக்கு என்கிற குழப்பம் குறித்து தகவல் வெளியாகியுள்ளது


லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள லியோ திரைப்படத்தின் டிரைலர் அக். 5ஆம் தேதி வெளியானது. டிரைலருக்கு ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய அளவில் வரவேற்பு கிடைத்துள்ளது. கவனம் ஈர்க்கும் சண்டைக்காட்சிகளையும் விஜய்யின் இரு வித்தியாசமான தோற்றத்தையும் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

அதேநேரம், டிரைலரில் விஜய் பேசிய தகாத வார்த்தையும் சர்ச்சையானது. இப்படம் அக்.19 ஆம் தேதி உலகளவில் வெளியாக உள்ளதால், படத்தின் புரோமோஷன் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

மேலும், இப்படத்தின் தமிழக வெளியீட்டு உரிமையைப் பெற உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயண்ட் நிறுவனம் முயன்று வருவதாகவும் அதனால் ஏற்பட்ட அரசியல் தலையீடுகள் காரணமாகவே லியோ இசைவெளியீட்டு விழா நடைபெறவில்லை என பலரும் கருத்துத் தெரிவித்து வந்தனர்.

இந்நிலையில், இக்குழப்பங்களுக்கு பதிலளிக்கும் விதமாக ரெட் ஜெயண்ட் நிறுவனம் லியோ வெளியீட்டு உரிம விவகாரத்திலிருந்து விலக்கிக்கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால், தமிழகத்தில் லியோ தயாரிப்பு நிறுவனமான செவன் ஸ்கிரின் ஸ்டூடியோவே இப்படத்தை  வெளியிடலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

X
Dinamani
www.dinamani.com