
இயக்குநர் பிரசாந்த் நீல் இயக்கத்தில் நடிகர் யஷ் நடிப்பில் உருவான கேஜிஎஃப் திரைப்படம் வசூலில் புதிய சாதனையை படைத்தது. இந்திய அளவில் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றதுடன் ரூ.1,200 கோடி வசூலையும் பெற்றது.
கேஜிஎஃப் 2 படத்தினைத் தொடர்ந்து, இயக்குநர் பிரஷாந்த் நீல் தற்போது நடிகர் பிரபாஸை நாயகனாக வைத்து ‘சலார்’ படத்தை இயக்கியுள்ளார். இந்தப் படத்தில் ஸ்ருதி ஹாசன் நாயகியாக நடிக்கிறார். பிருத்விராஜ் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
இதையும் படிக்க: 6 படங்கள் கைவசம்: பிரபலங்கள் வாழ்த்து மழையில் அனிருத்!
ஜூலை 6ஆம் நாள் அதிகாலை 5.12 மணிக்கு சலார் (முதல் பாகம்) படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்களிடம் பெரிய வரவேற்பைப் பெற்றது. ரிலீஸ் தேதி குறித்த பல சிக்கல்களுக்கு மத்தியில் இப்படம் டிச.22 ஆம் தேதி வெளியாகும் என படக்குழு சமீபத்தில் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிக்க: லியோ படத்திற்கு தொடரும் சோதனை! பிரீமியர் காட்சிகள் ரத்து
இந்நிலையில் நடிகர் பிருத்விராஜின் பிறந்தநாளை முன்னிட்டு சலார் படக்குழு புதிய போஸ்டர் வெளியிட்டு வாழ்த்து தெரிவித்துள்ளது.
இதில் அவரது கதாபாத்திரத்தின் பெயர்- வரதராஜ மன்னர் எக் குறிப்பிட்டு பிறந்தநாள் வாழ்த்துகள் எனத் தெரிவித்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.