இழப்பை விவரிக்க வார்த்தைகளே இல்லை: ஹன்சிகா மோத்வானி உருக்கம்! 

நடிகை ஹன்சிகா மோத்வானி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் உருக்கமான பதிவினை எழுதியுள்ளார். 
இழப்பை விவரிக்க வார்த்தைகளே இல்லை: ஹன்சிகா மோத்வானி உருக்கம்! 


நடிகை ஹன்சிகா தமிழில் ‘எங்கேயும் காதல்’, ‘ஒரு கல் ஒரு கண்ணாடி’ படத்தின் மூலம் பிரபலமடைந்தார். அதன்பின் ‘பிரியாணி’, ’சிங்கம் 2’ உள்ளிட்ட படங்களில் நடித்தார். மேலும், தமிழ் மற்றும் தெலுங்கில் சில படங்களில் நடித்து வருகிறார்.

கடந்த ஆண்டு டிசம்பர் 4 ஆம் தேதி  ஹன்சிகா, தொழிலதிபர் சோகேல் என்பவரை ஜெய்பூர் அரண்மனையில் பிரம்மாண்டமாக திருமணம் செய்துகொண்டார். இவர்களின் திருமண விடியோ ‘லவ் ஷாதி டிராமா’ என்கிற பெயரில் டிஸ்னி ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது. 

சமீபத்தில் மை 3 எனும் இணையத்தொடர் டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டாரில் வெளியாகி கலவையான விம்ர்சனங்களை பெற்றன. நாய்கள் மீது விருப்பம் உள்ளவர். இன்ஸ்டாகிராமில் பல புகைப்படங்களில் தனது வளர்ப்பு நாயுடன் இருக்கும் புகைப்படங்களை பதிவிட்டுள்ளார் ஹன்சிகா. 

இந்நிலையில் ஹன்சிகா தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது வளர்ப்பு நாய் இறந்தது குறித்து உருக்கமாக பதிவிட்டுள்ளார். அந்தப் பதிவில், “அன்பான ப்ரூஜோ, எனது வாழ்விலே இதுதான் கடினமான குட் ஃபையாக இருக்கும். உன்னை நாங்கள் மிகவும் மிஸ் செய்கிறோம்.

நீதான் எனது குழந்தைகளில் மிகச் சிறந்தவன். உனது இழப்பை விவரிக்க வார்த்தைகளே இல்லை. உனது ஆன்மா சாந்தியடையட்டும் ப்ரூஜோ. எனக்குத் தெரியும் நீ மேலிருந்து எங்களை பார்த்துக்கொண்டிருப்பாய். டெட்டி, மர்ஃப்பி தனது சகோதரனை மிஸ் செய்வார்கள். லவ் யூ” எனக் கூறியுள்ளார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com