தென்னாப்பிரிக்காவில் விஜய் - 68 படப்பிடிப்பு!

விஜய்யின் 68வது படத்தின் படப்பிடிப்பு குறித்து தகவல் வெளியாகியுள்ளது.
தென்னாப்பிரிக்காவில் விஜய் - 68 படப்பிடிப்பு!

லியோ படத்தைத் தொடர்ந்து விஜய்யின் 68வது படத்தை வெங்கட் பிரபு இயக்குகிறார். படத்துக்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். 

படத்தை ஏ.ஜி.எஸ் நிறுவனம் பிரமாண்ட பொருட்செலவில் தயாரிக்க உள்ளது. சமீபத்தில் இந்தப் படத்தின் படப்பிடிப்பு துவங்கியது. பாடல் காட்சி ஒன்றை எடுத்துள்ளனர்.

இந்நிலையில், அடுத்தக்கட்ட படப்பிடிப்பிற்காக படக்குழு தென்னாபிரிக்கா சென்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

இப்படத்தில் நடிகர்கள் ஜெயராம், பிரபு தேவா, மோகன், பிரஷாந்த்,  வைபவ், சினேகா, லைலா, பிரியங்கா மோகன், மீனாட்சி சௌத்ரி உள்ளிட்டோர் நடிக்கின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com