பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய மூன்றாவது போட்டியாளர் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
பிக் பாஸ் சீசன் 7 விஜய் தொலைக்காட்சியில் அக். 1-ஆம் தேதி தொடங்கியது. இந்த சீசனில் கூல் சுரேஷ், பிரதீப் ஆண்டனி, ரவீனா தாஹா, வினுஷா தேவி, விஷ்ணு விஜய், மாயா எஸ்.கிருஷ்ணா, விசித்திரா, யுகேந்திரன் வாசுதேவன், பவா செல்லத்துரை, மணி சந்திரா, அனன்யா உள்பட மொத்தம் 18 போட்டியாளர்கள் பங்கேற்றனர்.
கடந்த சீசன்களை போல் இல்லாமல் பிக் பாஸ், ஸ்மால் பாஸ் வீடுகள் என இரண்டாக பிரிக்கப்பட்டுள்ளது. இதனால், போட்டி தொடங்கியது முதல் இரு வீட்டாருக்கு இடையே கடுமையான வாக்குவாதமும், சண்டையும் ஏற்பட்டு ரசிகர்களை பரபரப்பில் வைத்துள்ளனர்.
இதற்கிடையே முதல் வார எவிக்ஷனில் அனன்யாவும், இரண்டாவது வாரத் தொடக்கத்தில் உடல்நிலை சரியில்லாததால் பவா செல்லதுரையும் வெளியேறியுள்ளனர்.
இந்த வாரம் பிக் பாஸ் மற்றும் ஸ்மால் பாஸ் போட்டியாளர்களுக்கு இடையே ‘ஆக்ஸிஜன் எமர்ஜென்ஸி’ என்ற டாஸ்க் வைக்கப்பட்டது. இதில், ஸ்மால் பாஸ் வீட்டின் போட்டியாளர்கள் பிரதீப் ஆண்டனியை பிக் பாஸ் வீட்டின் போட்டியாளர் விஜய் வர்மா தூக்கி தரையில் அடித்தார். அதேபோல், விஷ்ணுவிடமும் விஜய் கடுமையாக நடந்து கொண்டார்.
முன்னதாக, முதல் வாரத்திலேயே பிரதீப் ஆண்டனியை மிரட்டும் விதமாக பேசிய விஜய்க்கு கமல் மஞ்சள் எச்சரிக்கை கொடுத்திருந்தார். இதனால், இந்த முறை சிவப்பு எச்சரிக்கை கொடுத்து விஜய் வர்மாவை கமல் வெளியேற்றுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது.
இதையும் படிக்க | ரஜினியா இது? : வைரலாகும் விடியோ!
தற்போது கமல் பங்கேற்கும் வார இறுதி நாள் படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில், எவிக்ஷனில் குறைவான வாக்குகள் பெற்ற விஜய் வர்மா வெளியேற்றப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

இந்த வாரம் கலாரசிகன் - 26-07-2026

திருவண்ணாமலை இடுக்குப் பிள்ளையாா் கோயிலில் சிக்கிய பெண் பக்தர்!

பாரதியின் சக்தி வழிபாட்டுச் சிந்தனை

இன்றைய செய்திகள் ஜூலை 26 - நேரலை
விடியோக்கள்

ரயிலில் Solar Panel-கள்? இந்திய ரயில்வேயின் புதிய முயற்சி! | Indian Railways

யார் இந்த துணிச்சலான பெண்! காவல் வாகனத்தை தனி ஆளாக தடுத்து நிறுத்தியவர்! | CJP | BJP

CJP போராட்டத்தில் இனி...? | DINAMANI EXCLUSIVE | Dharmendra Pradhan | BJP | Abhijeet Dipke


