லியோ: 4 நாள்களில் ரூ.400 கோடி வசூல்!

லியோ திரைப்படத்தின் முதல் 4 நாள்கள் வசூல் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
லியோ: 4 நாள்களில் ரூ.400 கோடி வசூல்!


லியோ திரைப்படத்தின் முதல் 4 நாள்கள் வசூல் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய் நடிப்பில் லியோ திரைப்படம் கடந்த வியாழக்கிழமை வெளியானது.

உலகம் முழுவதும் 6,000 திரைகளில் வெளியான லியோ, தமிழகத்தில் பாதுகாப்பு காரணங்களால் அதிகாலை காட்சிக்கு மாநில அரசு அனுமதி வழங்கவில்லை. காலை 9 மணிக்குதான் முதல் காட்சி துவங்கியது.

இப்படம் ரசிகர்களிடையே கலவையான விமர்சனங்களை பெற்றாலும், முதல் நாளில் ரூ.148.5 கோடி வசூலித்து திரையுலகை அதிரவைத்தது. இந்தாண்டு வெளியான இந்திய படங்களில் அதிகபட்ச முதல் நாள் வசூல் என்ற சாதனையை படைத்தது.

இந்த நிலையில், முதல் 4 நாள்களில் ரூ.404 கோடிக்கு மேல் வசூலித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. தயாரிப்பு நிறுவனத்திடம் இருந்து இன்று அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இன்னும் இரண்டு நாள்கள் ஆயுத பூஜை மற்றும் விஜயதசமி விடுமுறை இருப்பதால் படத்தின் வசூல் வேகமாக அதிகரிக்க வாய்ப்புள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com