ரம்ஜான் கொண்டாட்டத்தை மேலும் இரட்டிப்பாக்கும் தங்கம் விலை நிலவரம்!அதிமுகவின் முதலாளிகள் பாஜகவும் அமித் ஷாவும்தான்: ஜோதிமணி எம்.பி.கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்புதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

தெலுங்கில் அறிமுகமாகும் செல்வராகவன்!

இயக்குநர் செல்வராகவன் தெலுங்கில் நடிகராக அறிமுகமாகிறார்.

News image
Updated On :25 அக்டோபர் 2023, 12:32 pm

DIN

துள்ளுவதோ இளமை படத்தில் அறிமுகமானவர் இயக்குநர் செல்வராகவன். காதல் கொண்டேன், மயக்கமென்ன, புதுப்பேட்டை, ஆயிரத்தில் ஒருவன் போன்ற நல்ல திரைப்படங்களை தமிழுக்கு கொடுத்தவர். இவரது இயக்கத்தில் கடைசியாக தனுஷுடன் நானே வருவேன் படம் வெளியானது. 

இவர் நடிகை சோனியா அகர்வாலை 2006இல் திருமணம் செய்து 2010இல் விவாகரத்து செய்தார். பின்னர் கீதாஞ்சலி ராமனை 2011இல் திருமணம் செய்தார். இவர்களுக்கு 3 குழந்தைகள் இருக்கிறார்கள். அடிக்கடி விவாகரத்து குறித்து தகவல்கள் பரவுவது இவரது விஷயத்தில் பழக்கமாகிவிட்டது. ஆனால் இவர் மகிழ்ச்சியான வாழ்க்கையே வாழ்ந்து வருகிறார். 

Story image

தற்போது படங்களில் பிஸியாக நடித்து வருகிறார். இறுதியாக பகாசூரன், பர்ஹானா படங்கள் வெளியானது. 

இந்நிலையில், இவர் தெலுங்கு படத்தில் அறிமுகமாகிறார். நடிகர் ரவி தேஜா, இயக்குநர் கோபிசந்த் மாலினேனி கூட்டணியில் உருவாகும் படத்தில் செல்வராகவன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளார். மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு தமன் இசையமைக்கிறார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.