நடிகர் சூர்யா தற்போது கங்குவா படத்தில் நடித்து வருகிறார். இதனைத் தொடர்ந்து, அவரின் 43-வது படத்தை இயக்குநர் சுதா கொங்காரா இயக்க உள்ளதாக தகவல் வெளியாகியிருந்தது.
முன்னதாக, சுதா கொங்காரா இயக்கிய ‘சூரரைப் போற்று’ படத்தில் நடித்து சிறந்த நடிகருக்கான தேசிய விருதை சூர்யா வென்றிருந்தார்.இக்கூட்டணி மீண்டும் இணைய உள்ளதால் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
இதையும் படிக்க: புதிய தொழில் துவங்கிய நயன்தாரா!
மேலும், சூர்யா - 43 படத்தில் நடிகர் துல்கர் சல்மான், நடிகை நஸ்ரியா ஆகியோர் இணைய உள்ளதாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில், இப்படத்தின் அப்டேட் நாளை(அக்.26) வெளியாகும் என தயாரிப்பு நிறுவனம் 2டி எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தெரிவித்துள்ளது. இதனால், சூர்யா ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.
#43 Hours to go
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.