தவெக என்ன செய்தது எனக் கேட்கும் எதிர்க்கட்சித் தலைவர் என்ன சுதந்திர போராட்டத் தியாகியா? அமைச்சர் ரமேஷ்அதிமுக மூழ்கிக்கொண்டிருக்கும் கப்பல்: தவெகவுக்கு இன்னும் பலர் வருவார்கள்: செங்கோட்டையன்இந்தியாவின் மரபணுவிலேயே புதுமை: பிரான்ஸில் பிரதமர் மோடி பேச்சுசேலம் பாலியல் வன்கொடுமை வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்: மு. வீரபாண்டியன்5 மாவட்டங்களில் நாளை மழைக்கு வாய்ப்பு!ராகுல் காந்தி இந்தியாவின் சாதனைகளைக் குறைத்து மதிப்பிடுகிறார்: நிர்மலா சீதாராமன்
/

அரசியல் கதையாக உருவாகும் சூர்யா - 43?

நடிகர் சூர்யாவின் 43-வது படத்தின் அறிவிப்பு விடியோ ரசிகர்களைக் கவர்ந்து வருகிறது.

News image
Updated On :27 அக்டோபர் 2023, 11:11 am IST

நடிகர் சூர்யா தற்போது கங்குவா படத்தில் நடித்து வருகிறார். இதனைத் தொடர்ந்து, அவரின் 43-வது படத்தை இயக்குநர் சுதா கொங்காரா இயக்க உள்ளதாக தகவல் வெளியாகியிருந்தது.

முன்னதாக, சுதா கொங்காரா இயக்கிய ‘சூரரைப் போற்று’ படத்தில் நடித்து சிறந்த நடிகருக்கான தேசிய விருதை சூர்யா வென்றிருந்தார்.இக்கூட்டணி மீண்டும் இணைய உள்ள தகவல் எதிர்பார்ப்பை அதிகரித்தது.

இந்நிலையில், சூர்யா 43-வது படத்தை சுதா கொங்காரா இயக்குவதாக தயாரிப்பு நிறுவனம் 2டி எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தெரிவித்துள்ளது. மேலும், படத்திற்கு புறநானூறு என்கிற வார்த்தையைப் பயன்படுத்தியுள்ளனர். படத்தின் பெயரை அறிவிக்கவில்லை. 

இதையும் படிக்க: தங்கலான் அப்டேட்!

இந்த விடியோவில் போராட்டம், மக்கள் கூட்டம், ரேடியோ, பழைய ரக துப்பாக்கி, ஒலிவாங்கி ஆகியவை இடம்பெற்றுள்ளதால் இப்படம் அரசியலை மையப்படுத்தி 1970 - 80களில் நடக்கும் பிரியடிக் படமாக (period film) உருவாக வாய்ப்புள்ளதாகத் தோன்றுகிறது. உண்மைச் சம்பவங்களை அடிப்படையாகக் கொண்ட கதையாக இருக்கும் என்பதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

Story image

இப்படத்தில் நடிகர்கள் துல்கர் சல்மான், விஜய் வர்மா, நடிகை நஸ்ரியா ஆகியோர் நடிக்க உள்ளதையும் கூறியுள்ளனர். இது ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கும் 100-வது படம் என்பது குறிப்பிடத்தக்கது.

Dear all we are excited! Joining hands with @Sudha_Kongara again in a @gvprakash musical, his 100th! SO looking forward to work with my brother @dulQuer & the talented #Nazriya & the performance champ @MrVijayVarma Glad @2D_ENTPVTLTD is producing this special film! #Jyotikapic.twitter.com/wW9iu0jMeR

— Suriya Sivakumar (@Suriya_offl) October 26, 2023

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.