கமல்ஹாசன் நடிக்கும் இந்தியன் - 2 படத்தின் முக்கிய அறிவிப்பு வெளியாகியுள்ளது.
லைகா நிறுவனம் தயாரிப்பில் அனிருத் இசையில், ரவி வர்மா மற்றும் ரத்னவேலு ஒளிப்பதிவில் உருவாகும் இந்தியன் 2 படத்தில் கமலுடன் இணைந்து சமுத்திரக்கனி, பாபி சிம்கா, காஜல் அகர்வால், சித்தார்த், ராகுல் பிரீத் சிங், பிரியா பவானி சங்கர் உள்ளிட்ட நட்சத்திர பட்டாளங்கள் நடித்து வருகின்றனர்.
இந்தப் படத்தின் படப்பிடிப்பு விரைவில் நிறைவடைய உள்ளதாகவும், அடுத்தாண்டு பொங்கலை முன்னிட்டு திரையரங்குகளில் இந்தியன் - 2 திரைப்படம் வெளியாகும் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்தியன் - 2 படத்துக்கு கமல் டப்பிங் செய்யும் விடியோவை படக்குழு முன்னதாக வெளியிட்டது.
இந்த நிலையில், இந்தியன் - 2 படத்தின் முக்கிய அறிவிப்பு நாளை(அக்.29) காலை 11 மணிக்கு வெளியாகவுள்ளதாக படக்குழு போஸ்டர் வெளியிட்டு அறிவித்துள்ளது.