
லியோ படப்பிடிப்பு தளத்தில் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை நடிகை த்ரிஷா சமூக ஊடகங்களில் பகிர்ந்துள்ளார்.
அஜித்துடன் நடித்த மங்காத்தா திரைப்படத்துக்கு பிறகு, விஜய் சேதுபதிக்கு ஜோடியாக நடித்த 96 திரைப்படம் மாபெரும் ஹிட்டானது. இதனைத் தொடர்ந்து, மணிரத்னம் இயக்கிய பொன்னியின் செல்வன் படத்தில் குந்தவையாக நடித்து ரசிகர்களிடம் பிரபலமானார் நடிகை த்ரிஷா.
தற்போது, விஜய்யின் லியோ படத்தில் நடித்து இருந்தார். லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவான லியோ திரைப்படம் உலகம் முழுவதும் 6,000 திரைகளில் வெளியானது.
இப்படம் 7 நாள்களில் ரூ.461 கோடிக்கும் அதிகமாக வசூலித்துள்ளதாக தயாரிப்பு நிறுவனம் அதிகாரபூர்வமாக அறிவித்தது. இப்படத்தில் இடம்பெற்ற லோகிவர்ஸ் 2.0 தீம் இசையின் விடியோவை தயாரிப்பு நிறுவனம் முன்னதாக வெளியிட்டிருந்தது.
இந்த நிலையில், லியோ படப்பிடப்பில் த்ரிஷா எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் மற்றும் விடியோக்களின் தொகுப்பை அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
இதையும் படிக்க: விக்ரம் 62 படத்தின் அறிவிப்பு வெளியானது!
தற்போது, இந்த புகைப்படத் தொகுப்பு விடியோ சமூக ஊடகங்களில் டிரெண்டாகி வருகிறது.

செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...