பேரவையில் கடந்த காலத்தைப்பற்றியே விஜய் பேசுவது ஏன்? அன்புமணி கேள்விஉருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி! செப். 19 முதல் மழைக்கு வாய்ப்பு!பிலிகுண்டுலுவுக்கு 14 ஆயிரம் கன அடியாக நீர்வரத்து அதிகரிப்புஅக்டோபர் 11-ல் முதல்வர் விஜய்யின் வாழ்க்கை வரலாற்றுப் புத்தகத்தை வெளியிடுகிறேன் - மதுரை ஆதீனம் நவோதயா பள்ளிகளுக்கு இடங்கள் தேர்வு செய்ய தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு!2027-ஆம் ஆண்டுக்கான சிபிஎஸ்இ 10, 12ஆம் வகுப்புத் தேர்வு அட்டவணை! மாணவர் பாரதிதாசன் கண்ணீர் விடியோ! சமூக நீதி நாளில் இப்படி ஒரு அநீதி - உதயநிதி

ஜெயிலரால் ரூ.1 கோடி வசூலித்த திரையரங்கம்!

ஜெயிலர் திரைப்படத்தை வெளியிட்ட திரையரங்கம் ஒன்று ரூ.1 கோடி வசூலித்து சாதனை புரிந்துள்ளது.

Published On :

நெல்சன் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடித்த ’ஜெயிலர்’ திரைப்படம் ஆகஸ்ட் 10ஆம் தேதி உலகம் முழுவதும் 7,000 திரைகளிலும் தமிழகத்தில் 1,200 திரைகளிலும் இப்படம் வெளியானது.

இந்த படம், முதல் வார முடிவில் உலகம் முழுவதும் 375.40 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளதாக தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக தெரிவித்திருந்தது.

தொடர்ந்து, இரண்டாவது வார இறுதியில் ஜெயிலர் 14-வது நாளில் ரூ. 525 கோடியை கடந்துள்ளதாக தயாரிப்பு நிறுவனம் அறிவித்திருந்தது.

இதன்மூலம், 2.0 படத்துக்கு பிறகு ரூ. 500 கோடி வசூலைக் கடந்த ரஜினியின் படமாக ஜெயிலர் சாதனை படைத்தது. 

மேலும், தமிழகத்தைத் தவிர நாட்டின் பிற மாநிலங்களில் இப்படம் ரூ.200 கோடியை வசூலித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதில் ஆந்திரம் மற்றும் தெலுங்கானாவில் ரூ.76.85 கோடியும் கர்நாடகத்தில் ரூ.62.9 கோடியையும் கேரளத்தில் ரூ.49.25 கோடி மற்றும் பிற மாநிலங்களில் ரூ.14.6 கோடியையும் வசூலித்துள்ளதாக தகவல். தமிழகத்தில் ஜெயிலர் ரூ.175 கோடியை வசூலித்துள்ளதாகக் கூறப்படுகிறது.

இதையும் படிக்க | லியோ பணிகள் தீவிரம்!

இந்நிலையில், பெங்களூருவில் உள்ள பிரபல ஊர்வசி திரையரங்கம் ஜெயிலரை வெளியிட்ட 22-வது நாளில் ரூ.1 கோடி வசூலைக் கடந்துவிட்டதாக தெரிவித்துள்ளது. இந்தத் திரையரங்கில் இதற்கு முன் பிரபாஸ், யஷ் இருவர் மட்டுமே இந்த வசூலை செய்திருந்தனர். இப்போது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தும் பட்டியலில் இணைந்திருக்கிறார்.

படம் வெளியாகி 3 வாரங்களைக் கடந்தபோதும் ஜெயிலர் வசூல் வேட்டையை நிகழ்த்தி வருகிறது!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.