லியோவில் ஏன் நடிக்கவில்லை? விஷால் விளக்கம்!

லியோ திரைப்படத்தில் நடிக்காததற்கான காரணத்தை நடிகர் விஷால் தெரிவித்துள்ளார்.
லியோவில் ஏன் நடிக்கவில்லை? விஷால் விளக்கம்!
Published on
Updated on
1 min read

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்துள்ள லியோ படத்தில் த்ரிஷா, சஞ்சய் தத், அர்ஜுன், இயக்குநர்கள் மிஷ்கின், கௌதம் மேனன் உள்ளிட்ட பல பிரபலங்கள் நடித்துள்ளனர்.

இப்படம் வெளியீட்டிற்கு முன்பே ஓடிடி, இசை உரிமம், விநியோக உரிமம் என ரூ.350 கோடிக்கு மேல் வருவாய் ஈட்டியுள்ளதாகவும் கூறப்படுகிறது. லியோ படம் இந்தாண்டு அக்டோபர் மாதம் திரைக்கு வருகிறது.

சமீபத்தில், நடிகர்கள் சஞ்சய் தத் மற்றும் அர்ஜுன் ஆகியோரின் பிறந்தநாள்களை முன்னிட்டு சிறப்பு கிளிம்ப்ஸ் விடியோக்களை படக்குழு வெளியிட்டிருந்தது.

இப்படத்தின் இசைவெளியீட்டு விழா சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் செப்டம்பர் - 23 ஆம் தேதி  நடத்தப்படும் என்று கூறப்படுகிறது.

இப்படத்தின் எடிட்டிங் பணிகளைத் தொடர்ந்து அடுத்ததாக விஎஃப்எக்ஸ் பணிகள் ஆரம்பமாகியுள்ளன. இதன்பின், டப்பிங் மேற்கொள்ளபட உள்ளது. அக்டோபர் 19 ஆம் தேதி இப்படம் வெளியாக உள்ளதால் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் படத்தின் தரத்தை தீவிரமாக மெறுகேற்றி வருகிறார்!

இந்நிலையில், இப்படத்தில் முதலில் அர்ஜுன் கதாபாத்திரத்தில் நடிக்க நடிகர் விஷாலிடம்தான் லோகேஷ் கனகராஜ் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார். ஆனால், விஷால் லியோவில் இணையவில்லை. காரணம், அவர் மார்க் ஆண்டனி படத்தில் நடித்து வந்தார்.

தற்போது விஷால், “லியோ படத்திற்காக 4 மாதங்கள் கால்ஷீட் தேவை என லோகேஷ் சொன்னார். ஆனால், நான் மார்க் ஆண்டனியில் நடித்துக்கொண்டிருந்ததால் என்னால் அப்படத்தில் இணைய முடியவில்லை. என் சூழலை லோகேஷ் புரிந்துகொண்டார்’ எனக் கூறியுள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com